பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந் நசிவுக் கலாசார முறைகளைப் பிரகாசமாக எடுத்துக்காட்டி இளைஞர் சமுதாயத்தை வசீகரிப்பதற்கு டெலிவிஷன், வீடியோ போன்றவை வெகுவாகப் பயன் படுத்தப்படுகின்றன. பத்திரிகைகளும் அவற்றில் இடம் பெறுகிற விளம்பரங்களும் கூட.

அவற்றின் மூலம் கவர்ச்சிக்கப்படுகிற இளம் வயதுப் பெண்களும் ஆண்களும் அவை காட்டுகிற தோற்றங்களைத் தாங்களும் பெற ஆசைப்படுகிருச்கள். நடை உடை பாவனைகளில் மேலேதாட்டு நாகரிக மோஸ்தர்களே: ஆர்வத்தோடு கையாள்கிரு.ர்கள்.

அவை எவ்வளவு கோமாளித்தனமாகவும், கோரணி களாகவும், அணிகிறவர்களே அவமதிப்பதாகவும் மட்டமாக நினைக்கத் துரண்டுவதாகவும் இருந்தாலும் கூட, நவீன நாகரிகம் என்ற பெயரால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படு கின்றன.

பெண்கள் அணிகிற மேலாடைகளில் கவர்ச்சி வசனங்கள் என அச்சிட்டுப் பரப்பப்படுகிற எழுத்துக்கள் இதி தன்மையை புலப்படுத்தக் கூடியனவாக இருக்கின்றன.

நாகரிக இசைக் குழுவினரும், ஹிப்பிகள் என்று உலகம் சுற்றித் திரிகிற நபர்களும் சகல நாடுகளிலும் ஒழுக்கச் சிதைவைப் பரப்புவதோடு, இளைஞர்களை போதை மருந்து களுக்கு அடிமைகளாகவும் ஆக்கிவிடுகிற பணியை கட்டுப் பாடின்றி நிறைவேற்றிக்கொண்டிருக்கிரு.ர்கள்.