பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவற்றை மக்கள் அதிகம் உபயோகிப்பதற்கும் ஊக்கம் அளிக்கின்றன.”

உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்று இப்படிக் கூறுகிறது.

போதைப் பொருள்களால் என்ன என்ன கெடுதல்கள் என்பதை விளக்குவதாக மட்டுமில்லாமல், போதைப் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களின் அமைப்புகளுக்கும், ஒரு நாட்டின் மக்கள் அருந்துவதற்குக் கிட்டும் போதைப் பொருள்களின் அளவுக்கும், அதஞல் மக்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதற்கும் இடையே உள்ள தொடர்புகளே வெளிப்படுத்துவதாக இந்த ஆய்வு அமைத் திருக்கிறது.

போதைப் பொருள்களை உற்பத்தி செய்து, விளம்பரப் படுத்தி விற்பனை பண்ணும் பன்னுட்டு வணிக நிறுவனங்களில் அநேகம் பல சந்தர்ப்பங்களில் பொது மக்களின் உடல் நலனுக்கு மிகுந்த கேடு விளைவிக்கும் வகையில் செயல் புரிந்திருக்கின்றன. அண்மையில் சிறிது காலமாக அவை வளரும் நாடுகளுடன் செய்து வரும் கொடுக்கல் வாங்கல் களில் இது மேலும் தெளிவடைந்து வந்துள்ளது.

இந்த ஆய்வு துணிகரமாகப் பல முக்கிய உண்மைகளே வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதனால், அது உலகெங்கும் பலத்த எதிர்ப்புகளையும் கிளர்ச்சிகளையும் தூண்டிவிடும் எனக் கருதி, உலக உடல் நல நிறுவனம், தனது ஊழியர்களால் தயாரிக்கப்பட்ட அந்த ஆய்வு அறிக்கையை புத்தகமாக வெளியிடுவது ஆபத்தானது என்று முடிவு செய்து அதைத் தடுத்து நிறுத்தி விட்டது.

அமெரிக்காவில் ஜனதிபதி ரீகன் ஆட்சிக்கு வந்தது முதல் இந்தப் பன்னட்டு வர்த்தக நிறுவனங்களின்

நலன்களைப் பாதுகாத்து வளர்த்து வந்திருக்கிருர்கள். அவை எத்தகைய வர்த்தகக் கட்டுப்பாடுகளிலும் சிக்காமல்

57