பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. சிதைகின்ற கலாசாரம்

நாடு முழுவதற்கும் அதிர்ச்சியும் அளவு இல்லாத சோகமும் ஏற்படுத்திய முக்கிய நாள். அன்று வேறு வகை அதிர்ச்சியும் குழப்பமும் உண்டாக்கிய நிகழ்ச்சிகளும் நாட்டின் பல்வேறு இடங்களில் அங்கங்கே தலைதுாக்கின.

இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி சுடப்பட்டு மரணம் அடைந்த தினம். மக்களின் உள்ளத்தை சோகம் கவ்வியது. நாடு நெடுகிலும் துக்கம் கவிந்தது. அந்நிலை யிலும் வேண்டத்தகாத நிகழ்ச்சிகள் பல இடங்களில் வெறி யாட்டம் போட்டன.

அங்கங்கே சில பேர் வெறிச் செயல்களில் ஈடுபட்டு விட்டது மக்களில் பெரும்பாலாருக்கு பெரும் கவலையும் வேதனையும் அளித்தது. டில்லியிலும் மற்றும் அநேக இடங் களிலும், சீக்கியர்கள் தாக்குதலுக்கு இலக்கானர்கள். பிரதம மந்திரியின் உடல் தகனம் செய்யப்படுவதற்குள்ளாக எத்தனையோ அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட் டார்கள்.

பொது மக்களுக்கு இடைஞ்சல் உண்டாக்கி அமைதியைக் குலைக்கும் வன்முறைச் செயல்கள், வீடுகளினுள் புகுந்து குழப்பங்கள் விளைவித்தல், பெண்களை மானபங்கம் செய்தல், போக்குவரத்து ஸ்தம்பித்துப் போகும்படி வாகனங்களே மறித்து அவை ஒடவிடாது தேக்கிவைத்தல் போன்றவை டில்லி மாநகரிலும் மற்றும் நாட்டின் பலப்பல இடங்களிலும் நடைபெற்றன. எல்லாம் பிரதமர் இந்திரா காந்தியின்

Lo. &F~~! 5。