பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளரும் நாடுகள் பன்னட்டு வணிக நிறுவனங்களின் போதைப் பொருள் தயாரிப்புகளே வாங்கி உபயோகித் துள்ளன,

1989-ம் வருடத்தில் சுமார் 27 பன்னுட்டு வணிக திறுவனங்கள் வெறிமம் கலந்த போதைப் பொருள்களைத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தன. அவற்றின் ஒரு வருட உற்பத்தி தலா நூறு கோடி டாலர் மதிப்புள்ள தாகும். இவை வெறிமம் கலக்காத பல்வேறு இலகுபானங் களையும் தயாரித்து, தங்கள் துணை நிறுவனங்கள் வழியாக, உலகம் முழுவதும் விற்பனை செய்து வந்தன.

இந்த விதமான பல நிறுவனத் தொடர்புகள், ஒன்றுக் கொன்று வில் குறைத்து விற்பனை செய்ய மானியங்களும் உதவியும் அளிக்கின்றன. அத்துடன் வெறிமம் கலந்த போதைப் பொருள்களை ஏராளமாக விற்பனை செய்வதில் உதவி புரிவதும் சாத்தியமாகிறது.

ஒரு சிறு அமெரிக்க மது தயாரிப்பு நிறுவனத்தை 1969ல் பிலிப் மாரிஸ் புகையிலைக் கம்பெனி விலை கொடுத்து வாங்கியது. 1980-ல் உலகிலேயே போதைப் பொருள்கள் தயாரிக்கும் குழுக்களில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அனவுக்கு அது வளர்ந்து விட்டது.

உலக புகையிலே சிகரெட் உற்பத்தி விற்பனை செய்யும் ஒழு பன்னுட்டு வணிக நிறுவனங்களில் ஐந்து நிறுவனங்கள் அவற்றின் துணை நிறுவனங்கள் வழியாக போதைப் பொருள்கள் தயாரிப்பதிலும் விற்பனை செய்வதிலும் கணிச மான பங்கு பெற்றுள்ளன.

மனிதனே பழக்கத்துக்கு அடிமையாக்கும் ஒரு பொருளை , புகையிலையை, பல்லாண்டு காலமாக உலகெங்கும் விற்பனை செய்து கிடைத்த அனுபவத்தையும் ஆற்றலையும், மற்ருெரு பழக்கத்துக்கு அடிமையாக்கும் பொருளை-வெறிமம் கலந்த போதைப் பொருள்களை-விற்பனை செய்யப் பயன்படுத்தினர்

§ {}