பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. ஹிப்பி கலாசாரம்

போதை மருந்துகள் பரவுவதற்கு, கட்டுப்பாடற்துத் திரிகிற ஹிப்பிகளும் முக்கிய காரணம் ஆவர்.

பாப் சங்கீதம் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது

போலவே, ஹிப்பி கலாசாரமும் இளைய தலைமுறை யினரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாப் இசையில் அதிகாரத்தையும் சம்பிரதாயங்களையும் எதிர்க்கிற போக்கைக் கண்டு அவற்ருல் வசீகரிக்கப்பட்டது போல, ஹிப்பிகளின் சமூக எதிர்ப்பு, ஸ்தாபன எதிர்ப்பு, ஒழுக்கங்களை எதிர்ப்பது, கட்டுப்பாடுகள் மற்றும் திட்ட மான வாழ்க்கையை எதிர்ப்பது முதலிய போக்குகளிளுல் எல்லா இடங்களிலும் உள்ள இளைஞர்கள் கவர்ந்திழுக்கப் பட்டார்கள்.

வீட்டின் பாதுகாப்பையும், பெற்ருேர்களின் அடக்கு முறைகளையும், சமூகத்தின் கட்டுப்பாடுகளையும் அமைதி யான வாழ்க்கையையும், மத சம்பிரதாயங்களையும், சகல விதமான சட்டதிட்டங்களையும் இளைஞர்கள் வெறுக்க லாஞர்கள். படித்துப் பட்டங்கள் பெற்றுவிட்ட போதிலும் அவர்களுக்கு வாழ்க்கையில் பிடிப்பும் எதிர்கால நம்பிக் கையும் தரக்கூடிய வகையில் வேலை எதுவும் கிடைப்பதில்லை. நிலையான வாழ்க்கை ஒன்றை அமைத்துக் கொள்வதற்கு தற்கால சமூக அமைப்பும், அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகளும் இளைஞர்களுக்கு எந்தவிதமான உறுதியும் அளிப்பதாகயில்லை.

63