பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவர்களின் கட்டுப்பாடுகள் இல்லாத வாழ்க்கை முறை களே சினிமாக்களும், பத்திரிகை ரிப்போர்ட்டுகளும் கவர்ச்சி கரமாகப் படம் பிடித்துக் காட்டின. இளைஞர்களை வாய் விட்டுப் பாடவும், சீட்டி அடித்து’க் களிக்கவும் தூண்டக் கூடிய வசீகர மெட்டுகளில் அமைந்த கவர்ச்சிப் பாடல்கள் திரைப் படங்களில் ஒலித்தன.

ஹிப்பிக்களாகத் திரிவதற்குப் போதிய துணிச்சல் இல்லாத இளைஞர்கள் தம்மாரே தம் போன்ற பாடல் களைப் பாடிக் கொண்டும், தம் அடித்து’க் கொண்டு, தலை முடியையும் தாடியையும் வளர்த்துக் கொண்டும், தங்கள் எதிர்ப்பை மறைமுகமாகக் காட்டுவதில் உற்சாகம் கண்டார்கள். திரைப்படம் அவர்களே அந்த அளவுக்கு பாதித்துள்ளது.

ஆங்கிலத்தில் வெளிவருகிற வடஇந்திய சஞ்சிகைகள் சில இப்போதுகூட ஹிப்பிகளின் கோவா வாழ்க்கையை, வசீகரமான வர்ணப் படங்களோடு, சுவாரஸ்யமாக விவரிக் கின்றன-தங்களது விற்பனையை அதிகப்படுத்திக் கொள் வதற்காகத்தான்,

இளைஞர்களின் மனதை பாதித்துக் கொண்டிருக்கிற பலரகமான பத்திரிகை மசாலாத்தனங்களில் இதுவும்

ஒன்றேயாகும்.