பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. விளம்பர வலைவீச்சு

சமயத்துக்குத் தகுந்தபடி, இது கம்ப்யூட்டர் யுகம், இது எலெக்ட்ரானிக் யுகம், இது மின்சார யுகம் என்றெல் லாம் சொல்லப்படுவது உண்டு. ஆயினும் இது விளம்பர யுகம் என்று சொல்வது எல்லா சமயங்களுக்கும் பொருத்த மாக இருக்கும் என்று தோன்றுகிறது.

சகல வழிகளிலும் பணம் பண்ண ஆசைப்படுகிற முதலாளிகள்-வாழ்க்கையின் சகல துறைகளையும் வியாபார அாக்கி விட்ட பளுதிபதிகள்-தங்கள் வணிகப் பொருள் கண் எங்கும் எப்போதும் எல்லோரிடமும் பரப்புவதிலேயே கருத்தாக இருக்கிரு.ர்கள். .

அவர்களுடைய வியாபாரப் பொருள்களை நுகர்வோர் பெருகப் பெருகத்தானே அவர்களுக்கு லாபம் அதிகம் கிட்டும்! அதற்காக கூடியவரையில் மிகப் பலரை தங்களது சரக்குகளேயே வாங்கி நுகர்வோர் ஆக மாற்றுவதற்காக பன அதிபர்கள் கவர்ச்சிகரமான விதங்களில் விளம்பரங்கள் செய்து கொண்டே இருக்கிரு.ர்கள்.

நவீன சாதனங்களான பத்திரிகைகள், சினிமா, ரேடியோ, டி. வி. அனைத்தும் விளம்பரங்களுக்காகத் தீவிரமாகப் பயன்படுத்தப் படுகின்றன.

மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு அம்சமும் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு யோசனை கூறுவதாக, வழி காட்டுவதாக, கட்டுப்படுத்துவதாக, பயிற்றுவிப்பதாகவே பெரும்பாலான விளம்பரங்கள் இருக்கின்றன.

66