பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளம்பரங்கள் மக்களிடையே தனி ருசியை உண்டாக்கு வதற்கு முயல்கின்றன.

அத்தியாவசியத் தேவைகள் போக, இதர பொருள்களை உபயோகிக்கத் துரண்டுகிற விளம்பரங்களும் கவர்ச்சிகரமாக அமைக்கப்படுகின்றன. சிகரெட் வகைகள், டீ காப்பி மற்றும் பல்வேறு பாண்வகைகள், மது தினுககள், சாக்லெட்-பிஸ்கட் ரகங்கள்

தலைவி மாத்திரைகள், ஜலதோஷ நிவாரணிகள், சோர்வை அகற்றக் கூடிய சத்துப் பொருள்கள்

இவ்வாறு மக்களின் வாழ்க்கையை முற்று முழுதாக மாற்றி அமைக்க ஆசை காட்டுகிற விளம்பரங்கள் எப்போதும் பார்வை வழியாகவும் , செவிப்புலன்கள் வழியாகவும் சகல தரத்தினரையும் சகல வயதினரையும் தாக்கிக் கொண்டே இருக்கின்றன.

அவற்ருல் வசீகரிக்கப் படுகிற சிறு பிள்ளைகள் வாய்ப்பாடு போலவும், இன்னிசை மாதிரியும் விளம்பர வாசகங்களை நீட்டி முழக்குவதில் மகிழ்ச்சி காண்கிரு.ர்கள், அவை உபதேசிக்கிறபடி பிஸ்கட், சாக்லெட், பான வகைகளை வாங்கி உபயோகிக்க வேண்டும் என்று பெற்ருேரை நச்சரிக்கிருர்கள்.

பேட்டன்ட் மாத்திரைகள், மருந்து வகைகள், மற்றும் நிவாரணிகள் வலி பற்றிய கவர்ச்சிகர விளம்பரங்கள்-அம் மருத்துகள் தரக்கூடிய நன்மைகள் பற்றி புகழ்ந்து பேசுகிற விளம்பரங்கள்-மக்களை வெகு எளிதில் மயக்கி விடுகின்றன. அவர்கள் அவற்றை நம்பி, டாக்டர் எவரையும் நாடாமலே, எந்தவிதமான மருத்துவ ஆலோசனைகளும் இன்றி அம்மருத்துகளை வாங்கி இஷ்டம் போல் உபயோகிக் கிருர்கள். அடிக்கடியும் அளவுக்கு அதிகமாகவும் உபயோகிக் கிருர்கள். இதனுல் பாதகமான விளைவுகளும், எதிர்பாராத வேதனைகளும் தொந்தரவுகளும் ஏற்படுகின்றன.

68