பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைவுக்காக அனுதாபம் காட்டி துக்கம் அனுஷ்டிப்பது என்ற பெயரில் நிகழ்ந்தன.

நம்மில் பலரும் நமது நாட்டின் நலத்தையும் அதன் எதிர்காலத்தையும்பற்றி கருத்து உடையவர்களாகவே இருக்கிருேம். நம் வாழ்க்கையில் எதிர்ப்படும் சோதனைகள் அனைத்தையும் எதிர்கொண்டு,ஒரு மாபெரும் கலாசாரத்தின் வாரிசுகளாகத் திகழும் மக்களாகவே நாம் வாழ விரும்பு இருேம். இந்த நாடு உயர்ந்து வளர்ந்து, உலக நாடு களிடையே மாண்புடன் தலைநிமிர்ந்து விளங்க வேண்டும் என்று ஆசைப்படுகிற நாம் அந்த துக்க தினத்தன்று நாடு தெடுகிலும் நடந்த சம்பவங்கள்பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

நாட்டின் நிலைகுறித்து எண்ணுகிறவர்களை கவலையோடு சிந்திக்க வைக்கும் ஒரு முக்கிய சம்பவம் ஒன்று. -

அந்த மாபெரும் சோக தினத்தில், மாநகரத்தில் பஸ்கள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. எந்தவிதமான போக்குவரத்து வசதியும் இல்லை. துாரா தொலைகளிலிருந்து நகரின் வெவ்வேறு பகுதிகளிலும் உள்ள அலுவலகங்களில் பணி புரிகிறவர்களும், கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் கல்வி கற்கும் மாணவிகளும் மாணவர்களும் எப்படி வீடு போய்ச் சேருவது என்று குழம்பித் தவித்தார்கள். நடந்து செல்வது தவிர வேறு வழி இல்லை என உணர்ந்து, நடந்து கொண்டி ருத்தார்கள்.

துணிந்து ஒரு சில ஆட்டோக்களும் டாக்சிகளும் ஒட முன் வந்தாலும்கூட, வன்முறைச் செயல்களில் ஈடுபட்ட வர்கள் அவற்றை வழிமறிப்பர்,அவற்றின் மீது கல்லெறிவர், வேறு பல தொல்லேகளும் தருவர் என்ற அச்சம் நிலவியது. வெறிபிடித்தவர்கள் எந்தெந்த விதங்களிலெல்லாமோ தங்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டி ஏதாவது செய்வதற்கு துடித்துக் கொண்டிருந்தார்கள். பிரதம மந்திரியின் திடீர் மரணம் ஏற்படுத்திய மகத்தான சோகத்திற்கும் அவர்