பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்களையும் வயது முதிர்ந்தவர்களையும் வசீகரிப்ப தற்காக வணிக முதலாளிகள் விளம்பரங்களில் கவர்ச்சித் துண்டில்களாகப் பெண்களைப் பயன்படுத்தத் தயங்குவ தேயில்லை. பெண்களுக்கு உபயோகமில்லாத பொருள்களைப் பற்றிய விளம்பரங்களில்கூட, அரை குதை ஆடையுடன் கவர்ச்சிகரமாக போஸ் கொடுக்கும் பெண்கள் காட்சி தருவது இன்றியமையாத அம்சம் ஆகி விட்டது.

உடை மற்றும் அலங்காரப் பொருள்களுக்கு லெக்ஸ் உணர்வைத் துரண்டும் கவர்ச்சி சுலோகங்களும், கிளுகிளுப்பு ஊட்டும் பெண் உடல் தோற்றங்களும், கொஞ்சிக் குலாவும் ஜோடிகளின் உருவங்களும் காட்சிப் படுத்தப்படுகின்றன.

இந்த ரீதியில் வாழ்க்கை முறைகள், பொழுது போக்கு, கேளிக்கைகள் முதலியவற்ருேடு வியாபாரமும் பின்னிப் பிணைத்து, மக்கள்மீது பெரும் அளவுக்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மக்களை அவரவர் தேசிய கலாசாரங்களேயும் சுய விருப்பு வெறுப்புகளையும் வளர்க்க விடாது, முதலாளித்துவ கலாசாரம் அவர்களது அறிவையும் சிந்தனேத் திறனையும் மழுங்கடிப்பதிலேயே கருத்தாக இருக்கிறது.

ஒரு நாட்டின் பொருளாதார, கலாசார வாழ்வில் விளம்பர நிறுவனங்கள் வலிய சக்தியாக இயங்குகின்றன. அவை பணநாயகர்களுக்கு மேலும் பணம் சேர்த்துக் கொடுக்கும் நோக்கத்தோடு, தொழிலதிபர்களின் தயாரிப்பு களை அதிகம் அதிகமாக உபயோகிக்கத் துரண்டும் விதத்தில் விளம்பரங்களைப் பரப்புகின்றன,

அவ்விளம்பரங்களில் கையாளப்படுகிற உத்திகள், வாசகங்களில் மேலைநாட்டுக் கலாசாரங்களின்-முக்கியமாக அமெரிக்காவின்-தாக்கங்கள் எடுப்பாகவே தெரியக்கிடக் கின்றன.

to, or-5 69