பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. எதிர்மறை விளைவுகள்

மேற்கத்திய நாடுகளின் முதலாளித்துவ கலாசாரம் பல வழிகளிலும் உலக மக்களின் உள்ளத்தை பாதித்துக் கொண் டிருக்கிறது. வியாபாரம், சித்தாந்தம், கேளிக்கை ஆகிய ஒன்ருேடு ஒன்று பிணைந்திருக்கும் செயல்பாடுகளின் மூலம், மக்களின் அறிவைக் கட்டுப்படுத்தி, முதலாளித்துவக் கொள்கைகளைப் பிரசாரம் செய்வதில் கருத்தாக இருக் கின்றன அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி ஆகிய நாடுகள்.

அத்துடன் நில்லாது, உலகில் பரவி வருகிற சோஷ விசத்துக்கும் கம்யூனிச சித்தாந்தத்திற்கும் எதிரான பிரசாரத்தைத் தீவிரமாகப் பரப்புவதில் முதலாளித்துவ நாடுகள் கருத்தாக இருக்கின்றன. இதற்காகப் பிரசார சாதனங்கள் பலவும் சாமர்த்தியமாகப் பயன்படுத்தப் படுகின்றன.

இந்த வகையில், பன்னாட்டு நிறுவனங்கள் உலக நாடு களின் தேசிய மற்றும் மக்கள் கலாசாரங்களை மிதித்துச் சிதைத்து விட்டு, தங்களுடைய போலித்தனமான, மேல் பகட்டுக் கலாசாரத்தைத் திணிக்கும் முயற்சிகளே மேற் கொள்வதில் பெரும் பணம் செலவிடவும் தயங்குவதில்லை,

அமெரிக்கப் பகட்டுக் கலாசாரம் எவ்வளவு பரவலாகத் தனது சக்தியைப் பரப்பக் கூடியது என்பதை ஒரு வியாபார. கேளிக்கை-கலாசார நிறுவனத்தின் புள்ளி விவரம் ஒன்றின் மூலம் எளிதில் ஊகிக்கலாம்.

7 :