பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமெரிக்க நிறுவனமான வால்ட் டிஸ்னி தயாரிப் பாளர்கள் கணக்கிட்டுள்ள ஒரு விவரம் இது:

வாரம் தோறும் 10 கோடி மக்கள் டிஸ்னி திரைப் படங்களைப் பார்க்கிரு.ர்கள். 80 கோடிப் பேர் டிஸ்னி புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் வாசிக்கிரு.ர்கள். 5 கோடிப் பேர் டிஸ்னி இசைத் தட்டுக்கள் அல்லது நடன இசையைக் கேட்கிருர்கள். 15 கோடிப் பேர் டிஸ்னி காமிக் வெளியீடு கனக் கண்டு களிக்கிரு.ர்கள்.

ஒரு நிறுவனத்தின் கணக்குப்படி இவ்வளவு என்ருல், இதர பன்குட்டு நிறுவனங்களின் கணக்கும் சேர்ந்தால், பாதிப்பின் அளவு எவ்வளவு மிகுதியாக இருக்கும்!

காமிக்ஸ்’ என்று சொல்லப்படுகிற சித்திரக் கதைகள் சிறுவயது மூதலே மக்களே ஆட்டிப் படைக்கின்றன. வீரதிர சாகசக் கதைகள், மர்மம் கொலே துப்பறிதல் காதல் வன்முறைச் செயல்கள் நிறைந்த விறுவிறுப்புக் கதைகள், பேய் பிசாசுக் கதைகள் முதலியன காமிக்ஸ் வெளியீடு கனாகப் பரப்பப்படுகின்றன. இவை சிறு வயதினரை, பள்ளி மாணவர்களே, வெகுவாக வசீகரிக்கின்றன. இளைஞர்களும் விரும்பிப் படிக்கிரு.ர்கள்.

பொழுது போக்கு, கேளிக்கை என்ற பெயரில் தந்திர மாக சோஷலிச எதிர்ப்பை முதலாளித்துவ நிறுவனங்கள் காமிக்ஸ் மூலம் செய்து வருகின்றன. சோஷலிச நாடுகள் மீது சிறுவர் உள்ளத்தில் வெறுப்பையும் விரோதத்தையும் வளர்ப்பதில் மேலைநாட்டுக் காமிக்ஸ் தயாரிப்பாளர்கள் கவனம் செலுத்தி வருகிருர்கள்.

துப்பறியும் வீரப்புலி அயல்நாடுகளில் புகுந்து, அங்கே நடக்கிற சதிவேலைகளைக் கண்டுபிடிக்கிற திறமையை விளக்கும் காமிக்ஸ் படங்களில், சர்வ வல்லமை பொருந்திய-எவராலும் தோற்கடிக்கப்பட முடியாதஎந்த சந்தர்ப்பங்களிலும் எவ்வளவு பெரிய ஆபத்துக் களிலும் தனியாகவே போராடி வெல்லும் திறமை பெற்ற

72