பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுக்க வேண்டும் என்பதே மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளின்- மற்றும் அனைத்து நாடுகளிலும் உள்ள முதலாளித்துவ சக்திகளின்- அடிப்படை நோக்கமும் செயல் திட்டமுமாக இருந்து வருகின்றன.

அவர்களுடைய நலனுக்கான விளம்பர அளவைப் பெருக்குவதற்கும், வன்முறை, பணம் பறித்தல், உளவு வேலை, செக்ஸ் ஈடுபாடுகள் போன்ற தரக்குறைவான விஷயங்களை மேன்மைப் படுத்தி கலாசாரச் சீர்குலைவை மிகுதிப்படுத்துவதற்குமே இவ் வலிய பிரசார சக்திகள் பேணி வளர்க்கப்படுகின்றன.

மனிதகுல வளர்ச்சிக்குப் பயன்பட வேண்டிய விஞ்ஞான சக்திகள், முதலாளித்துவ ஆதிக்கத்தில் எதிர்மறையான விண்வுகளையே உண்டாக்குகின்றன. ஆளும் வர்க்கத்தினர் தங்களுக்கு லாபகரமாக நிலைமைகளே உருவாக்கிப் பயன் பெறுவதற்காக, பெரும்பான்மை மக்களது நலன்களுக்கு விரோதமாகவே செயலாற்றிக் கொண்டிருக்கிரு.ர்கள்.