பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'மிருகத்தனமான முறையிலும், அர்த்தமற்ற தன்மை யிலும் நிகழ்ந்துவரும் வன்முறைச் செயல்களும் குற்ற நடவடிக்கைகளும் அமெரிக்காவில் அன்ருட நிகழ்வுகள் ஆகிவிட்டன. தற்காப்புக்கான சண்டைப் பயிற்சிகளை, கராத்தே போன்றவற்றை பழகுகிறவர்களின் எண்ணிக்கை இப்போது அங்கே அதிகரித்துள்ளது. காவல் துறையின் பாதுகாப்பில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். சராசரி அமெரிக்கர்கள் திம்மதியாக வாழும் உரிமையையே இழந்து விட்டது போல் தோன்றுகிறது.” பிரபலப் பத்திரிகையாளர் ஒருவரின் கருத்துரை இது.

அமெரிக்காவில் எண்ணெய் தொழிலுக்கு அடுத்தபடி யாக மிகப்பெரும் தொழிலாக இரண்டாவது இடத்தை வகிப்பது, முறையாக ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப் படுகிற குற்றச் செயல்களே ஆகும். இப்படி கட்டுப்பாட் டுடன் முறையாக நடத்தப்படுகிற குற்றச் செயல்களுக்கு சர்வதேசத் தொடர்புகள் உள்ளன. இந்தக் குற்றச் செயல் களில் சம்பந்தப்பட்ட பணத்தின் அளவு பதினையாயிரம் கோடி டாலர்கள் இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. போதை மருந்துகளே கடத்துவது, சூதாடும் விடுதிகள் நடத்துவது, கள்ளச் சாராய விற்பனை, விபசாரம், வழிப் பறித் தாக்குதல், தீ வைத்தல் முதலிய குற்றச் செயல்களும் இதில் அடங்கும்.

இவ்வாது ஒன்று சேர்ந்து கோஷ்டியாகச் செயல் புரியும் குற்றவாளிக் கும்பல்கள் பெரிய நகரங்களில் பல்வேறு பகுதி களிலும் தொழில் நடத்துகின்றன. தங்கள் நடவடிக்கை களுக்கு உரிய பிரதேசங்கள் சம்பந்தமாக அவை சொந்த விதிமுறைகளை அமைத்துக்கொண்டுள்ளன. நகரின் பல பகுதிகளும் பல்வேறு குழுக்களுக்கிடையே பங்கு போடப் பட்டிருக்கின்றன. அவரவர் நடவடிக்கை எல்லைகளை விஸ்தரிப்பதற்கான போட்டிகள் இந்தக் கோஷ்டிகளுக் கிடையே அவ்வப்போது தலைதுாக்குவது உண்டு. அதன் காரணமாக அவர்களுக்குள் அடிதடிச் சண்டைகள் நடப்பது

78