பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களது செயல்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இருந்ததாகத் தெரியவில்லை. -

காற்றடிக்கும் சோலையிலே கனி அடித்துத் திரிகின்ற செல்லப் பிள்ளைகள்'போல் சந்தர்ப்பங்களை தமக்கு சாதக மாகப் பயன்படுத்தி சுய இன்பம் பெறுவதில் நாட்டம் கொண்ட கல்லூரி மாணவர்கள் அநேகர் களிவெறியோடு செயல் புரியத் துணிந்தார்கள்.

மகளிர் கல்லூரி மாணவிகள் நடந்துவரும் ஒதுக்குப் புறச் சாலையில் “பொம்மெனப் புகுந்து மொய்த்தார்’கள்: பெண்களைக் கேலி பேசிச் சிரித்து மகிழ்த்தார்கள். காதல் என்ற பெயரில் காலித்தனமாகக் குதித்து ஆடிப்பாடியும் பெண்ணைத் துரத்தியும் குரங்குத்தனங்கள் பண்ணுகிற திரைப்பட நாயகர்கள் போல, மாணவிகளோடு விளையாட முயன்ருர்கள். பெண்களின் ஆடைகளைப் பிடித்து இழுத்தும் கிழித்தும் அலங்கோலம் செய்து கொக்கரித்தார்கள். பிரதமரின் மரணம் அவர்களுள் ஏற்படுத்திய சோகத்தை அவர்கள் இந்தவிதமாக வெளிப்படுத்தலானர்கள்.

அனுதாபத்துக்குரிய மாணவிகள் காலித்தன மாணவர் களிடமிருந்து தப்பிச் செல்வதற்குள் மிகுந்த தொல்லைகள் அனுபவிக்க நேர்ந்தது.

கல்வி கற்பதாகக் கருதப்படுகிற கல்லூரி மாணவர் களில் அநேகர் இப்படி ஒழுக்கக் குறைவுடன் நடந்து கொண்டது இதுதான் முதல் தடவை என்பதில்லை.

முன்பு ஒரு சமயம் மகளிர் கல்லூரி ஒன்றின் ஆண்டு விழாவின் போதும் பல மாணவர்கள் நடந்துகொண்ட விதம் மாணவ சமுதாயத்துக்குப் பெருமை சேர்ப்பதாக அமையவில்லை. -

இரவு நேரம். விழா நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. திடீரென்று மின் விளக்குகள் அணைந்து போயின. யாரோ திட்டமிட்டு மின் இணைப்பில் ஃப்யூஸ் போகும்படி செய்து, எங்கும் இருள் பரவ வழி வகுத்து விட்டதாகப் பின்னர் தெரிய வந்தது.