பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்கம். இச்சண்டைகள் அநேக கொலேகள் விழும் அளவுக்கு மிகவும் மூர்க்கமாக அமைந்து விடுவதும் சகஜ மாகும். பல சமயங்களில் இக் குழுவினரிடையே நடை பெறும் சண்டைகளில், தெருவோடு போகிற அப்பாவி மக்களும் அடிபட்டுச் சாக நேர்வதும் உண்டு.

மேலே கூறப்பட்டிருப்பது அமெரிக்க வர்த்தக உலக சஞ்சிகை ஒன்றின் விவரிப்பு ஆகும்.

இதே போன்ற நிலைமைகள் இதர மேலே நாடுகளிலும் நிலவுகின்றன என்பதையே அவ்வப்போது பிரசுரமாகிற தகவல்களும் புள்ளி விவரங்களும் சுட்டிக்காட்டுகின்றன.

இங்கிலாந்தில் வன்முறைக் குற்ற நடவடிக்கைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் இரு மடங்கு வளர்ந்து வருகிறது என்று பிரிட்டிஷ் காவல் துறையினர் கூறு கின்றனர்.

இத்தாலியில் ஒரு வருடத்தில் இருபது லட்சத்துக்கும் அதிகமான குற்றங்கள் புரியப்படுகின்றன.

மேற்கு ஜெர்மனியில் ஒவ்வொரு நிமிடமும் சராசரி இரண்டு கொள்ளைகள் அல்லது வழிப்பறிகள் நிகழ்கின்றன. இதனுல் ஆண்டு ஒன்றுக்கு கோடிக்கணக்கான மார்க் நாணயங்களின் இழப்பு ஏற்படுகிறது.

பூவுலகில் சொர்க்கத்தை நிலைநாட்டுவதாகப் பெருமை பேசுகிற முதலாளித்துவ நாடுகளில் நிலவுகிற மனித வாழ்க் கையின் எதார்த்த நிலைகள் இந்த லட்சணத்தில் இருக் கின்றன!