பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளே ஆக்கிரமித்து, அவற்றின் செல்வங்களை கொள்ளை கொண்டு, அந்நாட்டு மக்களே அடிமைப்படுத்தி, கொடுமையாகச் சுரண்டிக் கொழுத்து வந்தது வரலாறு ஆகும். அந்நாடுகளின், மக்களின், கலை கலாசாரங்களை அழித்து, அவர்களே அறியாமையிலும் வறுமையிலும் ஆழ்த்தி, அவர்களுடைய தொழில் முயற்சி களைக் கட்டுப்படுத்தியும் ஒடுக்கியும் வந்தன. மேலே நாடு களின் முதலாளித்துவ சக்திகள், தாங்கள் ஆக்கிரமித்த நாடு களின் மக்களே தரித்திர நிலையில் தள்ளி, தங்களுடைய வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தி ஆட்சி புரிந்து கொண்டிருந்தன.

உலகின் மீது முதலாளித்துவத்துக்கு இருந்த ஏகபோக திக்கத்திற்கு முட்டுக்கட்டை போட்டு, அதன் வெறித் தனம் மேலும் வளராமல் தடுக்கும் சக்தியாக சோஷலிசம் வளர்ச்சி பெறலாயிற்று. மாபெரும் அக்டோபர் புரட்சியின் விளைவாக ஒரு புதிய யுகம் பிறந்தது. சோஷலிச சித்தாந்தம் நடைமுறை எதார்த்தமாக மலர்ந்தது. -

புதிதாகத் தோன்றி வளரத் தொடங்கிய சோஷலிச சமுதாயம் மனிதனை மனிதன் சுரண்டிக் கொழுக்கிற கொடுமைக்கு ஒரு முடிவு கட்டியது. தேசங்கள், தேசிய இனங்களிடையே சமத்துவத்தைப் பரப்பியது. சமாதான, சமூக முன்னேற்றத்துக்குப் பாடுபட்டது. ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி மனிதகுலம் முன்னேறுவதற்கு வழி வகுத்தது.

ஆகவே, உலக முதலாளிகள், உலகத்தின் முதலாவது சோஷலிச நாடான ரஷ்யாவை தங்களுடைய பெரிய எதிரியாகக் கருதலாஞர்கள். சுதந்திர வேட்கை கொண்ட உலக நாடுகள் சோஷலிச சித்தாந்தத்தை ஏற்க முன் வந்ததையும், சோவியத் ரஷ்யாவை தங்களுடைய துணை யாய், தோழய்ை, வழிகாட்டியாய் ஏற்றுக் கொள்ள முனைந்ததையும் முதலாளித்துவ நாடுகளிளுல் சகித்துக் கொள்ள இயலவில்லை. -

8 ?