பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதனுல் முதலாளித்துவம் தனது பிரசார பலத்தையும் படைபலத்தையும் சோவியத் நாட்டின் மீது ஏவியது. எனினும், மகத்தான தன்னம்பிக்கையையும், மகா வலிமை பெற்ற மக்கள் சக்தியையும், உருக்கு உறுதி கொண்ட தொழிலாளர்களின் விவசாயிகளின் சோர்விலா உழைப்புத் திறனேயும் பலங்களாகக் கொண்டுள்ள சோவியத் ஆட்சியை முதலாளித்துவ சக்திகளால் அசைக்க முடியவில்லை.

உலகில் உழைப்புக்கும் வீரத்துக்கும் உயரிய எடுத்துக் காட்டாக விளங்கும் சோவியத் மக்கள் முதலாளித்துவ ஏகாதிபத்தியங்களின் ஆசைகளையும் கனவுகளையும் எதிர்ப்பு கண்வும் தவிடு போடியாக்கினர். இதுவும் வரலாற்று உண்மையே ஆகும்.

சோவியத் நாடு மகத்தான தேசபக்த யுத்தத்தில் பெற்ற மாபெரும் வெற்றியின் விளைவாக பாசிசம் அடியோடு வீழ்த்தப்பட்டது. அடிமை நிலையிலிருந்த பல நாடுகளுக்கு அது விடுதலை வாங்கித் தந்தது. ஐரோப்பாவிலும் ஆசியா விலும் பல சோஷலிச நாடுகள் உதயமாயின. சோஷலிசம் ஒர் உலக அமைப்பாக உருவெடுத்தது.

காலனி அடிமைத்தனத்தை தகர்த்தெறிந்த பல நாடுகள் சோஷலிசத்தை தங்கள் லட்சியமாக ஏற்றுக் கொண்டன. இதனுல் எல்லாம் உலக சக்திகளின் நிலையில் சோஷலிசத்துக்கு சாதகமாகத் தீவிர ம | ற் ற ம் உண்டாயிற்று.

அதே வேளையில், முதலாளித்துவ உலக சக்திகளிடை யிலும் பெரும் மாறுதல் ஏற்பட்டது. இரண்டு உலகப் போர்களிலுைம், ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனும் பலத்த நஷ்டங்களுக்கு உள்ளாகியிருந்தன. ஆளுல் அமெரிக்கா போர்களின் நாசத்துக்கு உள்ளாகவில்லை, மாருக, மிகுந்த ஆதாயங்களே அதற்குக் கிடைத்தன.

ஆயுதங்களின் வாணிபத்தால் அமெரிக்கா கொள்ளை லாபம் கண்டது. பணபலம் மிகுதியாகப் பெற்றுவிட்ட

83