பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமெரிக்கா மிக வல்லமை வாய்ந்த ஏகாதிபத்திய நாடு ஆகிவிட்டது. இதர முதலாளித்துவ சக்திகள் அதன் தலைமையை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

உலகில் வளர்ந்து வரும் சோஷலிச சக்திக்கு எதிராகப் பிரசாரம் செய்ய வேண்டிய அவசியமும், முதலாளித்துவத் க லே மை நாடான அமெரிக்காவுக்கு ஏற்பட்டது. முதலாளித்துவ நாடுகளின் சிறுமைகளையும் சீரழிவுகளையும், முதலாளித்துவப் பொருளாதாரத்தின் கொடுமைகளையும் குறைபாடுகளையும் மூடி மறைத்து, தங்களுடைய சமூகபொருளாதார அமைப்புதான் மிகவும் சிறந்தது என்று உயர்த்தி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பிரசாரம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அமெரிக்கா உணர்ந்தது.

அத்துடன், உலக மக்களுக்கு தன்மை புரித்து, முதலாளித்துவத்தை பலவீனமானதாக மாற்றிவரும் சோஷலிசத்துக்கும், அதை வலிய சக்தியாக நிலைநாட்டி வருகிற சோவியத் யூனியனுக்கும் எதிராக விரோதத் தையும் வெறுப்பையும் வளர்க்க வேண்டும் என்ற எண்ணமும் செயலுருப் பெற்றது.

இந்த நோக்கத்தில்தான் அமெரிக்காவும் இதர முதலாளித்துவ நாடுகளும் சகல பிரசார சாதனங்களேயும் பயன்படுத்தி வருகின்றன. -

முதலாளித்துவ நாடுகள் பலவும் மேலே நாடுகள் என அழைக்கப்படுவது வழக்கம் ஆயிற்று. மேலைநாடுகள் நவநாகரிகத்தின் உயர் சிகரங்கள் என்று வர்ணிக்கப் படலாயின. மேல்திசை முதலாளித்துவ சமுதாயமே சுதந்திரமானது, வளமும் சுபிட்சமும் சுகபோகங்களும் பூத்துக் குலுங்கும் அமைப்பு என்ற பிரசாரமும் ஓங்கியது.

உண்மையில் முதலாளித்துவ சமூகம் வ ள மு. ம் சுபிட்சமும் நிறைந்ததுதான?

83