பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்படி இல்லே என்பதை அமெரிக்காவின் எதார்த்த நில்களும் இதர முதலாளித்துவ நாடுகளின் நிலைமைகளும் வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டிருக்கின்றன.

முதலாளித்துவ நாடுகளில் குற்றங்கள், கொலைகள், வன்முறைச் செயல்கள் முதலியன பெருகி வருவதைப் போலவே, வறுமையும் வேலை இல்லாத் திண்டாட்டமும் விபசாரமும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

பணக்காரர்கள் ஒரு சிலர் மேலும் மேலும் பணம் சேர்த்து பெரும் பணக்காரர்கள் ஆகி வருகிருர்கள். அவர் களுடைய கயலாபச் சுரண்டல் போக்கிளுல் நாட்டில் வதுமை வளர்கிறது; ஏழைகள் எண்ணிக்கையில் பெருகு இருங்கள்.

மூதலாளித்துவத்தின் தலைமை பூமியான அமெரிக் காவில், ஏழைகள் என்று அதிகார பூர்வமாக வரையறுத்துக் கூறப்பட்ட அமெரிக்கர்களின் எண்ணிக்கை , 1983-ல் 3. கீ4 கோடிப் பேர் என்று குடிக்கணக்கு அறிக்கை தெரிவிக்கிறது.

குறைந்தபட்ச சத்துணவைக் கூடப் பெற முடியாத அமெரிக்க ஏழை மக்களின் தொகை 4, 7 கோடி ஆகும் என்து அதே கணக்கு கூறுகிறது. -

இவ் அதிகாரபூர்வமான புள்ளி விவரங்கள் சரியானவை அல்ல; இவை வேண்டுமென்றே மிகவும் குறைத்துச் செய்த மதிப்பீடுகளே ஆகும் என்று சமூக சேவை நிறுவனங்களும் பொது மக்கள் அமைப்புகளும் மறுப்பு தெரிவித்துள்ளன.

முன்னுள் அமெரிக்க அதிபர் ஜான் கென்னடியின் தம்பி எட்வர்டு கென்னடி பட்டினியால் வாடும் அமெரிக்கா என்ருெரு புத்தகம் எழுதியிருக்கிரு.ர். அமெரிக் காவில் பசி பட்டினியால் அவதிப்படும் நிலையில் சுமார் 6 கோடிப் பேர் இருக்கிருர்கள் என்று அவர் அதில் குறிப்பிடு கிருர். அதிகார பூர்வமான வறுமைக் கோட்டுக்குக்கீழே 3. 5 கோடி அமெரிக்கர்கள் வாழ்கிருர்கள்: 2 கோடிக்கு

శ్రీ డ్రీ