பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்பு இல்லாது அல்லல்படு கிமூர்கள் என்றும் அவர் கூறுகிரு.ர்.

முதலாளித்துவ நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் ஆதாகரேமாக வளர்ந்து வருகிறது. வருடத்துக்கு வருடம் அது பயங்கரமாக வளர்ந்து கொண்டே போகிறது.

வேலே இல்லாத் திண்டாட்டம் ஆண்கள் பெண்களின் கவுரவத்தைப் பறித்து விடுகிறது. குடும்பத்தில் சகிக்க முடியாத நெருக்கடி நிலையை உண்டாக்குகிறது. சமுதா யத்தின் அஸ்திவாரங்களையே உருக்குலைக்கிறது. இளம் தலே முறையினருக்கு எந்த நம்பிக்கைக்கும் இடம் இல்லாமல் செய்து, அவர்களது வாழ்க்கையை அர்த்தமற்றதாக்கி விடுகிறது. அவர்களிடையே: விரக்தி உணர்வை விதைக்கிறது.

வேலை இல்லாத் திண்டாட்டம் காரணமாக வாழ்க்கை யில் சலிப்படைந்து இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது என்று செய்திகள் அறிவிக்கின்றன.

1984-ல் சுமார் 30,000 அமெரிக்கர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று அமெரிக்கப் பேராசிரியர் ஒருவர் கூறியிருக்கிருர்,

அமெரிக்காவில் 88 லட்சம் பேர் வேலை கிடைக்காமல் அவதிப்படுகிருர்கள். போதிய சத்துணவு கொள்ள வசதி யற்ற நிலையில் 4 கோடியே.40 லட்சம் பேர் இருக்கிருர்கள். 30 லட்சம் அமெரிக்கர்களுக்குக் குடியிருப்பு வசதிகூட இல்லை இந்த அவலம் நிறைந்த சூழ்நிலைகள் தான் தற்கொலைக்குத் தூண்டுதலாக அமைகின்றன. இவ்விதம் ஒரு தகவல் அறிவிக்கிறது. .

இத்தகைய சமூக நிலைமைகளை வளர்த்து வருகிற முதலாளித்துவம் உலகத்துக்கே வளமும் வனப்பும் அளிக்கக் கூடிய உன்னதமான வாழ்க்கைச் சித்தாந்தம் ஆகும் என்று புகழ்ந்து பேசப்படுகிறது!

Lp. g。ー6 55