பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுத்தி வைத்து, அந்நாடுகளின் மக்களை மேற்கத்திய ஏகபோகங்கள் சுரண்டிக் கொழுப்பதற்குத் தேவையான திலேமைகளை உருவாக்கி வளர்ப்பதும் ஆகும்.

அரசியல், கலாசார மற்றும் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளைக் குறித்து அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வு இன்றைய மக்களுக்கு அதிகம் இருக்கிறது. தற்காலத்தில் மக்களின் அன்ருட வாழ்க்கையில் சகல அம்சங்களிலும் வெகுஜன தகவல் சாதனங்கள் புகுந்து தாக்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

காலேயில் கண் விழித்து எழும்போதே ரேடியோ கேட்பது என்பது மக்களின் நித்திய வழக்கம் ஆகிவிட்டது. அன்ருட வேலைகளே துவக்குவதற்கு முன் பத்திரிகைகள் படிப்பதும் அவர்களின் தவிர்க்க முடியாத பழக்கமாகி உள்ளது. வேலைக்குப் போகிற போதும், அலுவலகத்தில் நேரம் கிடைக்கிற போதும், பத்திரிகைகளையும் சஞ்சிகை களையும் அவர்கள் பார்க்கிரு.ர்கள்; புத்தகங்கள் படிக் இருர்கள். மாலையிலும் இரவில் வெகுநேரம் வரையிலும், விடுமுறை நாட்களிலும் டெலிவிஷன் பார்ப்பது ஒரு வேலை மாதிரி முக்கியமானதாகி விட்டது.

இந்த ஒவ்வொரு சாதனமும் மக்களுக்கு அவர்களுடைய சகோதர மக்களின் வாழ்வு பற்றியும், பிற மக்களைப் பற்றி யும் சர்வதேச நிகழ்ச்சிகள் பற்றியும் அறிவிக்கின்றன. இந்த விதமான வழிகளின் மூலம் மக்கள் அறிந்து கொள்ளும் தகவல்களின் பங்கு காலவேகத்துடன் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

எனவே, தகவல் சாதனங்கள் மக்களின் சமூக வாழ் விலும், மனித சமுதாய வாழ்விலும் அத்தியாவசியமான அம்சங்கள் ஆகியுள்ளன.

வெகு வேகமான தொழில்துறை வளர்ச்சி செய்திப், பரிவர்த்தனையின் அளவு அதிகரிப்பு, கல்வித் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள்-திறமை வாய்ந்த என்ஜினியர்களுக்கான

88