பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்நிலையில், சர்வதேசச் செய்தித் தொடர்புகளிலும் அயல் நாட்டு அரசியல் பிரசாரத்திலும் விசேஷ கவனம் செலுத்தப் படுகிறது.

அவ்விதமான அரசியல் பிரசாரத்துக்காகவே விசேஷ நிறுவனங்களும், ஆற்றல் மிக்க தொழில் நுட்ப சாதனங் களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நாடும் பிற நாடுகளுக்கென்றே தனி ரேடியோ ஒலி பரப்புகளைச் செய்கிறது.

இவ்வாறு தகவல் சாதனங்கள் சர்வதேசப்பிரசாரத்தின் மீது செல்வாக்கு செலுத்திக் கொண்டிருக்கின்றன.

டெலிவிஷன் மிக வலிய சக்தியாக, குறைந்த காலத்தில் உலகம் எங்கும் பரவியுள்ளது. வெகுஜனத் தகவல் துறையி லேயே மிகக் குறுகிய காலத்தில், மனித வாழ்விலும் சமூக வாழ்விலும் டெலிவிஷன் அளவுக்கு வேறு எந்தக் கண்டு பிடிப்பும் செல்வாக்கு செலுத்தியதில்லை. இது வரலாற்று உண்மையாகும். -

டெலிவிஷன் பெட்டிகளே பெரும் அளவில் தயாரிக்கத் தொடங்கி முப்பது வருடங்களே ஆகின்றன. அதற்குள் இந்த அற்புத சாதனம் உலகத்தை வெற்றி கண்டு தனது சக்தியை நிலை நாட்டிக் கொண்டது. இரு நூறு கோடிக்கும் அதிகமான பேர்கள் தினசரி டி. வி. நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்கிரு.ர்கள் என்று கணக்கிடப் பட்டுள்ளது.

டெலிவிஷன் வளர்ச்சி அடையவும், தற்கால மனிதர்கள் தங்கள் நேரத்தில் கணிசமான பகுதியை டி. வி. பெட்டி முன்னர் கழிப்பது சகஜமாகி விட்டது. இது பற்றிய ஒரு கணக்கெடுப்பு ரசமானது

ஒரு சராசரி ஆங்கிலேயன் தனது 70 வருட வாழ்வில் 12 ஆண்டுகளை டெலிவிஷன் பார்ப்பதில் கழிக்கிருன்.

அமெரிக்காவில் ஒரு சராசரிக் குடும்பம் தினசரி 6.2 மணி நேரத்தை டி.வி. பெட்டி முன்னே செலவிடுகிறது.

§§