பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 சதவிகித ஜப்பானியக் குடும்பங்கள் தினசரி டி. வி. பார்க்கின்றன.

பிரான்சில் மக்கள் தொகையில் 37, 4 சதவிகிதத்தினர் தங்கள் ஒய்வு நேரத்தில் பெரும் பகுதியை டி.வி.பார்ப்பதில் செலவிடுகிரு.ர்கள்.

டி.வி. பெட்டிகளின் உற்பத்தியும், அதை உபயோ கிப்போர் எண்ணிக்கையும் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. கலர் டி.வி. வருகையின் விளைவாக இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது.

டெலிவிஷனின் வளர்ச்சி, இந்த வெகுஜனத் தகவல் சாதனத்தின் சக்தியை நிரூபிக்கிறது. முதலாளித்துவ சமூகத்தில் அது பயன்படுத்தப் படுகிற விதத்தில் உள்ள முரண்பாடும் நன்கு புலணுகிக் கொண்டிருக்கிறது.

சோவியத் யூனியனிலும், இதர சோஷலிச நாடுகளிலும் மற்றுமுள்ள வளரும் நாடுகளிலும் இச் சாதனம் அறிவு வளர்ச்சிக்கான வழிகளில் பயன்படுத்தப் படுகிறது. உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் உள்ள மக்களின் வாழ்வைப் பற்றி நன்ருகத் தெரிந்து கொள்ளவும், பொது மக்கள் தேசிய உலக கலாசார மதிப்புகளை அறிந்து கொள்வதற்கும், அவர்களை ஆன்மிக ரீதியாக வளப்படுத்து வதற்கும் டெலிவிஷன் ஒளிபரப்பின் அளவு மேலும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

ஆளுல், முதலாளித்துவ நாடுகளில் இதற்கு நேர் மாருன நடைமுறையே காணப்படுகிறது. விளம்பரத்தின் அளவை வளர்ப்பதுதான் அங்கே முதன்மையாகக் கருதப் படுகிறது. மற்றும் வன்முறை, காமலீலைகள், பனம் பறித்தல், உளவு வேலை போன்ற கீழ்த்தரமான நிகழ்ச் சிகளை அளித்து மக்களின் சிந்திக்கும் திறனையும் ரசனைத் தரத்தையும் மழுங்கடிப்பதும் நடைபெற்று வருகிறது. இவ் வழியில் சினிமாவையும் பத்திரிகைகளையும் போலவே டெலிவிஷனும் கையாளப்படுகிறது.

9 :