பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருப்பு வெறுப்பு இல்லாத எதார்த்தமான செய்திகளைப் பரப்புவதற்குப் பதிலாக, பார்ப்பவர்களின் மனங்களை திசை திருப்பி விடும்படியாக ஒருதலைப் பட்சமான பிரசாரம் நடத்தப் படுகிறது.

தனக்கெனத் தனிப்பட்ட அக்கறைகளையும் அபிவிருத்தி விதிகளையும் கொண்டிருக்கிற பெரும் வாணிபத்துக்கு தகவல் சாதனத் தொழிலும் ஒர் அம்சமேயாகும். ஆகவே இத் தொழிலில் பல்லாயிரம் கோடி டாலர்கள் முதலீடு செய்யப் பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் உள்ள 500 பெரும் தொழில் நிறுவனங்களில், கொலம்பியா பிராட்காஸ்டிங் சிஸ்டம், தி ரேடியோ கார்ப்பரேஷன் ஆஃப் அமெரிக்கா, தி அமெரிக்கன் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் போன்ற திரைப்பட, ரேடியோ, டெலிவிஷன் கம்பெனிகளும் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றை விடப் பென்னம் பெரிய, வலிமை மிகுந்த ராட்சத நிறுவனங்கள், அமெரிக்க எலெக்ட் ரிக்கல் என்ஜினிரிங் கார்ப்பரேஷன்கள் அவைகளின் பின்னே இயங்குகின்றன. தொடர்பு சாதனங்களையும் எலெக்ட் ரானிக் கருவிகளையும் உற்பத்தி செய்வதில் அவை ஏகபோக உரிமை பெற்றிருக்கின்றன. மறைமுகமான விசைகள் அடங்கிய ஒரு கட்டுமான அமைப்பின் மூலம், ரேடியோ, டெலிவிஷன் கம்பெனிகள், திரைப்படத் தொழில், செய்தி ஏஜென்சிகள், பத்திரிகைகள் ஆகியவற்றின் செயல்முறைகளை அவை கட்டுப்படுத்தி வருகின்றன.

அநேக முதலாளித்துவ நாடுகளில், தகவல் சாதனத்தின் சில பகுதிகள்--ரேடியோ,டி.வி. சினிமாவில் டாக்குமெண்டரி படங்கள் தயாரித்தல் போன்றவை-அரசாங்க கட்டுப் பாட்டின் கீழ் இயங்குகின்றன. ஆயினும் அடிப்படை நிலை மையில் மாறுதல் எதுவும் இல்லை. அரசாங்கங்கள் கூட முதலாளித்துவ நலன்களைக் கருத்தில் கொண்டே திட்டங்கள் வகுக்கின்றன; செயல்கள் புரிகின்றன. ஏனெனில், மூலதனத் தின் துணை அரசாங்கங்களுக்குத் தேவைப்படுகிறது.

9露