பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தப் போக்கு குறித்து சோவியத் பத்திரிகையாளரான ஸ்பார்தக் பெக்லோவ் பின்வருமாறு முடிவு கட்டுகிருர்:

  • பத்திரிகைகள் மற்றும் டெலிவிஷன் தொழிலதிபர்கள் முதலாளி வர்க்கத்தின் நலன்களையே முக்கியமாகக் கருத்தில் கொண்டு ஆர்வத்துடன் செயல் புரிகிருர்கள். அவர்களே முதலாளிகளாக இருப்பதுதான் இதற்குக் காரணமாகும். அவர்களுக்கு லாபம் பெற்றுத் தருகிற அவர்களுடைய வாணிபப் பொருள்கள் மக்களின் மனசை பாதிக்கக்கூடிய சாதனமாகவும் இருப்பதால், அவர்களுக்கு விரோதமாக வினங்குகிற முற்போக்கு சக்திகளுக்கு எதிராக தங்களுடைய இந்த ஆயுதத்தை உபயோகிப்பதில், முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாப்பதற்காக அதை ஈடுபடுத்துவதில், இதர ஏகபோக முதலாளிகளைப் போலவே அவர்களும் அக்கறை காட்டுகிருர்கள்.”

தமது காலத்தில், தியோடர் ஒயிட் என்ற அமெரிக்க ஆசிரியர் கூறுவது போல, ஆதிக்க சக்தி என்பது தகவல் துறை மீதான கட்டுப்பாடே ஆகும். யார் இந்தக் கட்டுப் பாட்டை திர்வகிக்கிரு.ர்கள்? முதலாளித்துவ உலகில், தனிப்பட்ட மூலதனம், அல்லது திட்டவட்டமாகச் சொல்வ தானுல், பல டஜன் பெரிய ஏகபோகங்கள்தான் அனைத்துப் பத்திரிகைகளேயும் சஞ்சிகைகளையும், அச்சிடும் சாதனங் களேயும், அவை போன்றவற்றையும் சொந்தமாக நிர்வகிக் கின்றன. முதலாளித்துவ உலகில் உள்ள மிகப் பெரும் பான்மையான பத்திரிகையாளர்கள் இத்தகைய 'சொல் ஏகபோக'ங்களுக்காகத் தான் உழைக்கிரு.ர்கள். தகவல் துறையில், தங்களுடைய முதலாளிகளின் அரசியல் கொள்கைகளையே கடைப்பிடிக்கிருர்கள்.

இந்த ஏகபோக ஆதிக்கம் முதலாளித்துவ நாடுகளி னுள்ளே மட்டுமே காணப்படுகின்றன என்று சொல்வ தற்கில்லை. உலகின் பல பகுதிகளிலும், பன்னாட்டு ஏகபோ கங்கள் பலப்பல திறமையாகச் செயல் புரிகின்றன. முதலாளித்துவ நாடுகளிலும், வளர்ந்து வருகிற நாடுகள்

94 .