பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பாலானவற்றிலும், ரேடியோ, டெலிவிஷன், வெகு ஜனப் பத்திரிகைகள் முதலியவற்றில் வெளியிடப்படுகிற தகவல் மற்றும் கலை சம்பந்தமான விஷயங்களையும் , அவற்றின் தன்மைகளையும் சித்தாந்தப் போக்கையும் இந்த ஏகபோகங்களே தீர்மானிக்கின்றன.

உலகத்தின் மிகப் பெரிய 15 பன்னுட்டு கார்ப்பு ரேஷன்கள் தகவல் தொடர்பு சாதனங்களே உற்பத்தி செய்வதில் ஏகபோக உரிமை கொண்டிருக்கின்றன. அவற்றில் பத்து பென்னம் பெரிய நிறுவனங்கள் அமெரிக் காவைச் சேர்ந்தவை. அதே கார்ப்பரேஷன்கள் அமெரிக்க அரசு அமைப்பான பென்ட்டகன் மற்றும் இதர ஏகாதி பத்திய நாடுகளின் அமைச்சரவைகள் சம்பந்தமானவற்றின் முக்கியமான ஒப்பந்தங்களேயும் (கான்ட்ராக்குகளே} பெற்றிருக்கின்றன. அவை பெரும் அளவில் யுத்த தளவா உங்களை உற்பத்தி செய்து யுத்தமாகிய தொழிலில் நேரடி யாகப் பங்கு பற்றுகின்றன. இராணுவ-தொழில் துறை கூட்டு இணைப்பின் பிரதிநிதிகளாக தகவல் தொடர்புத் துறையில் இந்தக் கார்ப்பரேஷன்கள் செயல் புரிகின்றன என்று சொல்லலாம். இதன் மூலம் சர்வதேச அரங்கில் மிகப் பெரிய சித்தாந்த-பிரசார இயந்திரத்தின் செயல் முறைகளை ஆளுவோருக்கும் தங்களுக்கும் சாதகமான முறைகளில் இந்த நிறுவனங்கள் இயக்குகின்றன என்றும் சொல்ல வேண்டும்.

யுனைட்டெட் ஸ்டேட்ஸ் இன்பர்மேஷன் ஏஜன்சி என்பது தான் உலகத்திலேயே மிகப் பெரிய அரசாங்கப் பிரசார அமைப்பு ஆகும். வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா என்கிற ரேடியோ நிலையத்தையும் அதுதான் இயக்குகிறது. அந்த நிலையம் வாரம் தோறும் 800 மணி நேரத்துக்கும் அதிக மாகவே ஒலிபரப்புப் பிரசாரத்தை 39 மொழிகளில் செய்து கொண்டிருக்கிறது. g

ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் தான் அமெரிக்க தகவல் ஏஜன்சி (யுனைட்டெட் ஸ்டேட்ஸ் இன்பர்

§ 5