பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத்தகைய ஒரு காலகட்டத்தில், மேற்கத்திய தகவல் தொடர்பு சாதனங்கள்.மேலைநாடுகள் தயாரித்து அனுப்புகிற சரக்குகளை வாங்கி உபயோகிப்பதை அதிகப்படுத்தவும்: தன்னகங்காரம் -தற்பெருமை-தனிநபர் வாதம் இவற்றைத் துண்டி வளர்க்கவும், பணக் கலாசாரத்தையும் நலமான வாழ்வைகம்’ வெளிச்சமிட்டுத் துதிபாடவும் கூடிய வகையில் பிரசார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றன. மக்கள் மனசில் ஆழமாகப் பதிந்து தாக்கங்கள் ஏற்படுத்தும் விதத்தில், பூர்வு வாப் பிரசாரம் என்று தெரியாத வகையில், சாமர்த்தியமாகவும் தந்திரமாகவும் இத்தகைய நிகழ்ச்சிகள் தயாரித்து அளிக்கப்படுகின்றன.

மேலைநாடுகள் பரப்பி வருகிற தகவல் மற்றும் பொழுது போக்குக் கலை நிகழ்ச்சிகளில், நுகர்வோர் சமூகம் சம்பந்த மான கருத்துக்களும் மதிப்புகளும் கலந்து கிடக்கின்றன. அவை அனைத்தும் வளர்ந்து வரும் நாடுகளின் அடிப்படை நோக்கங்களுக்கும் அக்கறைகளுக்கும் முரளுனவையாகும். இத்தகைய தகவல் கருத்துக்கள் மக்களின் மரபு ரீதியான வாழ்க்கை முறைகளுக்கும் கலாசார அடையாளங்களுக்கும் எதிரிடையானவை. அது மட்டுமல்ல. மக்களின் எதிர் பார்ப்புகளுக்கும் நடைமுறை சாத்தியங்களுக்குமிடையே முரண்பாடுகளையும் அவை தோற்றுவிக்கின்றன. சாதாரண மக்களுக்கும் மேற்குடி மக்களுக்குமிடையே நிலவும் விரோதம் போக்கை அதிகப்படுத்தவும் செய்கிறது. பெரும் பாலானவர்களிடையே விரக்தியும் தோல்வி மனுேபாவமும் வாழ்க்கையில் நம்பிக்கை இன்மையும் தோன்றி வளரக் கூடிய சூழ்நிலைகளே உருவாகின்றன.

தகவல் துறைக்கும் வளர்ச்சிக்குமிடையே பரஸ்பரத் தொடர்பு உண்டு. தற்காலத்தில் தகவல் சாதனங்கள் ஒரு நாட்டின் வளர்ச்சி மட்டத்தை-பொருளாதாரம், சமூகம், கல்வி, கலாசாரம் முதலியவற்றில் நிகழும் வளர்ச்சிகளைகுறிக்கக் கூடிய முக்கிய அளவுகோல்களில் ஒன்ருக விளங்கு கின்றன.

38