பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 மக்கள்குழு ஒப்பந்தம் நாட்டில் பல அரசு அலுவலர்கள் இருக்கிறார்கள். சட்டமன்றம் இருக்கிறது. அதில் பலர் அமர்ந்து இருக் கிறார்கள். அமைச்சர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் கூடுகிறார்கள்; பல சட்டங்கள் போடுகிறார் கள். சில சட்டங்கள் நம்மில் சிலருக்குப் பிடிக்கவில்லை. ஒரு சட்டம் நமக்கு வேண்டியதை வேண்டா என்கிறது. ஒரு சட்டம் நமக்கு வேண்டாததை வேண்டும் என்கிறது. இன்னொரு சட்டம் நமக்கு வரியைச் சுமத்துகிறது. வேறு ஒரு சட்டம் சிலருக்குத் தண்டனை கொடுக்கிறது. இது ஏன்? மக்களின் வரிப் பணத்தில் வாழும் அரசு அலுவலர்கள் மக்களுக்கே இப்படி செய்யலாமா? இதன் காரணம் என்ன? இங்கேயும் பெரிய புது இரகசியம் உண்டா? இதையும் நாம் கண்டுபிடிக்க வேண்டும். இதோ அதற்கு வழி. அந்த வழி என்ன என்று மேலே போவோம். மனிதன் இப்போது மாடமாளிகையில் வசிக்கிறான்; அல்வா சாப்பிடுகிறான்; அருமையான காபி குடிக் கிறான்; வைர நகை அணிகிறான்; விழ வழப்பான ஆடை உடுத்துகிறான்; வகை வகையான வண்டிகளில் ஏறிச் செல்கிறான்; பெரிய படிப்பு படிக்கிறான். ஆனால் பழங்கால மனிதன் இப்படியா இருந்தான்? அதுதான் இல்லை; மலைக் குகைகளில் வசித்தான்; மலைப் பொந்துகளில் வாழ்ந்தான்; காய் கனிகளைத் தின்றான்; விலங்குகளை வேட்டையாடி உண்டான்; துணிக்குப் பதில் மரப்பட்டை, தழை இவைகளைச் சுற்றிக் கொண்டான்; நடந்து சென்றான்; சரியாகப் பேசவே தெரியாது. - எங்கிருந்து படிப்பான்? கிட்டத்தட்ட விலங்கு போல் வாழ்ந்தான்,