பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 மக்கள் குழு ஒப்பந்தம் கையில் வைத்திருப்பார். அதற்கு உழவாரப் படை” என்பது பெயர். இன்றும் நாவுக்கரசரின் சிலையிலும் படத்திலும் கையில் அந்தக் கருவி இருப்பதைக் காணலாம். அவர் அந்தக் கருவியால், திருக்கோயில்களிலும், தெருக்க ளிலும் முளைத்திருக்கும் வேண்டாத புல் பூண்டுகளை யெல்லாம் செதுக்கித் தூய்மை செய்வார். இந்தப் பணி முதலில் தொடங்கப்பெற்ற ஊர், தென்னார்க்காடு மாவட் டத்தில் ೧54.೧ು ஆற்றங்கரையில் உள்ள திருவதிகையாகும். புல் பூண்டுகளைச் செதுக்குவதோடு இப்பணி அமைந்துவிட வில்லை; தெருவிலுள்ள குப்பை கூளங்களை அப்புறப் படுத்தித் தூய்மை செய்வதும் இப்பணியுள் அடங்கும். திருவதிகையில் தொடங்கிய இப்பணி, திருநாவுக்கரசர் சென்ற விடங்களிலெல்லாம் அவருடன் நிழல்போல் தொடர்ந்து சென்றது. மாதிரி நகர்: திருநாவுக்கரசரால் தொடங்கப்பெற்று அறிமுகம் செய்யப்பட்ட உழவாரப் பணி, நாடு முழுதும் பல்வேறு ஊர்களிலும் பரவிப் பலராலும் செய்யப்பட்டது. 'திரு வதிகைத் தெருக்களைப் போல் நம்மூர்த் தெருக்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் - எனப் பல ஊர்களிலுமுள்ள திருவீதியாண்டார்” களுக்குக் கட்டளை யிடப்பட்டதாகப் பல ஊர்க் கல்வெட்டுகளும் கூறுகின்றன. தெருத் தூய்மையை மேற்பார்வையிடும் அலுவலர் திருவீதி யாண்டார் என அக்காலத்தில் அழைக்கப்பட்டனர். அன்று, திருவதிகை ஒரு மாதிரி நகர் ஆகக் கருதப்பட்டது என்பது கல்வெட்டுகளால் புலப்படுகிறது. பாண்டிநாட்டுத் திருக்கோயில்களின் திருவிழாக் காலங்களில், கொடியேற்று விழாவின் முதல் நாள், திருவீதி காணும் திருவிழா என ஒரு விழா நடைபெறுமாம். அதாவது, தெருக்கள்