பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. ஒவியக் கலையில் மகளிர் பங்கு ஓவியம்: "ஓவியக் கலையில் மகளிர் என்னும் தொடரில் மகளிர், ஒவியம் என்னும் இரண்டு சொற்கள் உள்ளன. எனவே, ஒவியம் பற்றியும் ஒவியத்தோடு மகளிர்க்கு உள்ள தொடர்பு பற்றியும் ஆராயலாம் என எண்ணுகிறேன். முதலில் ஒவி யம் பற்றிப் பார்ப்போம். கலைகள் அறுபத்து நான்கு என்று கூறப்படுவதை நாம் அறிவோம். இந்த எண்ணிக்கை ஒரு காலத்தில் கூறப் பட்டது. நாளடைவில் மேலும் பல கலைகள் வளர்ந்திருக் கலாம். கலைகளுள் ஒவியக் கலை சிறப்புடையது. பல கலைகட்கு ஒவியக்கலை முன்னோடியாகவும் அடிப்படை யாகவும் உள்ளது. வடிவக் கணிதம் (Geometry), அறிவியல் (Science), பொறியியல் (Enginery) முதலிய கலைகட்கு ஒவியம் இன்றியமையாதது. வடிவக் கணிதமே ஒருவகை ஒவியந்தான். அறிவியல் துறையில் பல பொருள்களைப் படைத்து உருவாக்க, முதலில் தாளில் ஒவியம் வரைந்து வைத்துக் கொண்டு அதைப் பார்த்து வடிவங்கள் அமைக் கின்றனர். கட்டடம் கட்ட முன் கூட்டியே போடப்படும் வரைபடமும் (Plan) ஒரு வகை ஒவியமே. சிற்பம் செதுக்கிச் செய்யவும் எழுதப்பட்ட மாதிரி ஒவியம் தேவைப்படுகிறது. மற்றும் மொழியின் எழுத்துக்களையும் ஒருவகை ஒவியம் எனலாம். சீன மொழி எழுத்துகள் ஒவிய எழுத்துகள் என் பதைப் பலரும் அறிவர். மொழி தோன்றுவதற்கு முன் ஒரு பொருளைக் குறிக்க எழுதிக்காட்டியிருப்பர். இப்போதுங்