பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 103 " ஓவியச் செந்நூல் உரைநூல் கிடக்கையும் கற்றுத் துறைபோகிய பொற்றொடி நங்கை ” (2 – 31, 32) என்னும் பாடல் பகுதியால் அறியலாம். தமிழில் ஒவியம் பற்றிய நூல்கள் முன்பு இருந்தன - இப்போது கிடைக்க வில்லை - அழிந்து போய்விட்டன என்பது இதனால் தெரி கிறது. ஒவியச் செந்நூல் என்று கூறப்பட்டிருப்பது இங்கே எண்ணத்தக்கது. இந்நூல் இப்போது இல்லை. இந்தப் பகுதியில் உள்ள துறைபோகிய என்னும் தொடர், இந்தத் துறையில் முழுப் புலமையும் திறமையும் பெற்றவள் என்பதை அறிவிக்கிறது. அடுத்து, ஐம்பெருங் காப்பியத்துள் ஒன்றாகிய சிலப்பதிகாரத்திற்குள்ளும் சென்று பார்ப்போமே. மாதவி என்னும் பெண், நிலா முற்றத்தில், பதுமாசனம் போட்டு அமர்ந்தபடி யாழ் வாசித்தாள் - என்ற ஒரு செய்தி கூறப் பட்டுள்ளது. அவள் அமர்ந்திருந்த இருக்கை பற்றிக் கூறும் பாடல் பகுதியை இங்கே தருகிறேன்: ' ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி நன்பால் அமைந்த இருக்கைய ளாகி ' (8 – 25, 26) என்பது அப்பகுதி. விருத்தி என்றால் உடற்பயிற்சியின் ஒரு வகையான ஆசனம் ஆகும். ஆசனம் என்னும் சமசுகிருதச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் இருக்கை' என்பதாகும். 'இருப்பு' என்றும் சொல்வதுண்டு. ஒன்பான் விருத்தி என் றால் ஒன்பது ஆசனங்கள்; தலைக்கண் விருத்தி' என்றால் ஒன்பதில் முதலாவதான 'பதுமாசனம் ஆகும். பதுமாசன மாகிய இருக்கை அமைத்துக்கொண்டு மாதவி யாழ் வாசித்தாளாம். பழைய உரையாசிரியராகிய 'அடியார்க்கு