பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 மக்கள்குழு ஒப்பந்தம் நல்லார்' என்பவர், இந்தப் பகுதிக்கு எழுதியுள்ள உரை யிலிருந்து ஒரு சிறு பகுதியை இங்கே தருகிறேன்: "இதனுள் விருத்தி என்பது இருப்பு. ஒவிய நூலுள் நிற்றல், இருத்தல், கிடத்தல், இயங்குதல் என்னும் இவற் றின் விகற்பங்கள் பல உள'- என்பது அந்த உரைப் பகுதி, இதிலிருந்து நாம் அறியவேண்டுவன:- ஒவிய நூல் தமிழில் இருந்திருக்கிறது; அதில் சொல்லப்பட்டுள்ள செய்திகளை மாதவி அறிந்து வைத்திருந்தாள்; அதன்படி இருக்கை அமைத்து அதாவது ஆசனம் போட்டு அமர்ந்து'யாழ்வாசித் தாள் என்பதாகும். பண்டு தொட்டுப் பெண்கள் ஒவியக் கலையில் வல்லவர்களாய் இருந்திருக்கிறார்கள் என்பதை இதனால் நாம் அறிய முடிகிறதல்லவா? இப்போது மீண்டும் ஒவியக் கலை தமிழ்நாட்டில் வளர்ந்து வருகிறது. பிறநாட்டு ஒவிய முறைகளும் அறிமுக மாகியுள்ளன. பெண்கள் முன்போலவே ஒவியக் கலையில் தேர்ச்சி பெற்று வருகின்றனர், பள்ளிக் கூடங்களில், ஒவியம் கற்ற பெண் ஆசிரியைகள் மாணவிகட்கு ஒவியம் கற்றுக் கொடுப்பதை அறியலாம். ஒரு சுண்ணக் கட்டியும் ஒரு கரும் பலகையும் இருந்தால் போதும்; அலாவுதீன் அற்புத விளக்குபோல, உலகத்தில் உள்ள எந்தப் பொருளையும் கரும்பலகைக்குள் கொண்டு வந்து காட்டலாம். எனவே, மகளிர் ஓவியக் கலையில் நன்கு தேர்ச்சி பெற்று ஒவியங் களைப் படைக்கவேண்டும். - பின்னல் வேலை: பள்ளிகளில் தையல் ஆசிரியைகள் தையலோடு பின்னல் வேலையும் கற்றுத் தருகின்றனர். பின்னல் வேலையில் ஓவியக்கலை ஊடுருவி நிற்கிறது. துணியில் பல வகைப் பொருள்களின் உருவங்கள் வண்ண நூல்களால் பின்னப்படு