பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 105 கின்றன. செடி-கொடி-மலர் வகைகள், ஆபரண வகைகள், பறவை-விலங்கு முதலிய உயிரிகள் - பல அஃறிணைப் பொருள் வகைகள் ஆகியவற்றின் வடிவங்கள் துணியில் பின்னப்படுகின்றன. மணிகளால் பின்னும் பொருள்களில் கூட உருவங்கள் அமைக்கின்றனர். இந்தப் பின்னல் ஒவியக் கலை ஆகாதா? ஒவியக்கலையின் அடிப்படையிலேயே உருவங்கள் பின்னி அமைக்கப் பெறுகின்றன. இக்கலை ஆங்கிலத்தில் எம் பிரா ய் டரி (Embroidery) என்று சொல்லப்படுவது நாம் அறிந்ததே. பள்ளிகளில் மட்டுமன்று; வீடுகளிலுங்கூட, ஒரளவு வயது முதிர்ந்த பெண்களுங்கூட, இந்த ஓவியப் பின்னல் வேலையைச் செய்து வருகின்றனர். இது, ஒய்வு நேரத்தை நன்முறையில் கழிக்கவும் மன ஒருமைப்பாடு உண்டாகவும் உதவும். அழகிய முறையில் பொருள்களைப் பின்னி விற்பனையும் செய்யலாம். ஒய்வு நேரத்தை வீணடிக்கும் பெண்கள் இந்தப் பின்னல் வேலையைச் செய்து பொழுதை நன்முறையில் கழிக்கலாம். கோலம் போடுதல்: இது மட்டுமா? இன்னும் ஒன்று பார்ப்போமா? மூன்று அல்லது ஐந்து வயது முதற்கொண்டே பெண்ணினம் ஒரு வகையான ஒவியக் கலையில் பயிற்சிபெறத் தொடங்கு கிறது என்று கூறலாம். கோலம் போடுதலைத்தான் சொல்கிறேன். தமக்கை, தாய், பாட்டி முதலியோர் போடும் கோலங்களைப் பார்த்ததும், மூன்று வயதுச் சிறுமியும், நான் கோலம் போடப் போகிறேன் - மாவு கொடுங்கள் என்று கேட்டு வாங்குகிறாள்; ஏதோ மனம் போன போக்கில் மாவைச் சிந்தித் தான் போட்டதற்குத் தனக்குத்தானே ஓர் உருவத்தின் பெயர் சொல்லி மகிழ் கிறாள்.