பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 9 இதை நம்ப முடியாதா? சான்று வேண்டுமா? இதோ சான்று! இப்போது மலைப் பக்கத்தில் வசிக்கும் வேடர் வில்லியரைப் பார்த்தால் தெரியும். இப்போதே இப்படி மாந்தர் இருப்பதைப் பார்க்கிறோம். இதைக் கொண்டு பழைய காலத்தைப் பற்றி நாம் நன்றாகப் புரிந்து கொள்ளலாம். * அப்போது விலங்கு போல் வாழ்ந்த மனிதன் இப்போது எப்படி இவ்வளவு நாகரிகம் அடைந்தான். இதை நாம் அடுத்தபடி ஆராய வேண்டும். விலங்கு என்ன செய்கிறது? ஒடி ஆடி இரை தேடுகிறது; கிடைத்ததைத் தின்னுகிறது; உறங்குகிறது; குட்டி போடு கிறது; இப்படி காலம் தள்ளுகிறது; அப்போதும் இப்படித் தான் செய்தது; இப்போதும் இப்படித்தான் செய்கிறது; இனி எப்போதும் இப்படித்தான் செய்யும். பழைய மனிதனும் இப்படித்தான் நடந்தான். ஆனால் மனிதனுக்கு விலங்கைவிட கூட ஒர் அறிவு உண்டு. அதுதான் பகுத்தறிவு. மனிதன் அறிவு புதுப் புது விதமாக வேலை செய்துகொண்டே போகும். நேற்று இட்லி என்றால் இன்றைக்குத் தோசை. நேற்று வெள்ளைச் சட்டை என்றால் இன்றைக்குக் கோடு போட்ட சட்டை. இப்படி மாற்றிக் கொண்டே இருப்பான். புதிது புதிதாகக் கண்டு பிடிப்பான்; புதிது புதிதாகச் செய்து பார்ப்பான். இந்தப் புது அறிவுதான் விலங்குபோல் இருந்தவனை நாகரிக மனிதனாக மாற்றியது. எப்படி மாறினான் என்று பார்ப்போமா? ஆதியில் மனிதன் தானாக விளைந்த தானியத்தை உண்டான். அது வேண்டிய நேரத்தில் கிடைப்பதில்லை. வேண்டிய அளவும் கிடைப்பதில்லை. பார்த்தான்; தனக்கு