பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 109 இதைக் கேட்டதும், இராமனுக்கு அனுமனின் சொல் திறமை வியப்பளித்தது; அனுமனைச் சொல்லின் செல்வன்' எனப் புகழ்ந்து, இவன் (அ னு ம ன்) நான்முகனாய் இருப்பானா? அல்லது சிவனாய் இருப்பானா எனப் பாராட்டினான். இதனை, இல்லாத உலகத் தெங்கும் இங்கிவன் இசைகள் கூரக் கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி சொல்லாலே தோன்றிற் றன்றோ யார்கொல் இச் சொல்லின் செல்வன்' வில்லார் தோள் இளைய வீர! விரிஞ்சனோ விடைவல் லானோ?” என்னும் பாடலால் அறியலாம். இத்தகைய அனுமன், ஒரு சொல் கூடச் சொல்லாமலேயே உணர்த்திய செய்தி களும் உண்டு. இனி அவற்றைக் காண்பாம்: இலங்கையிலிருந்து மீண்ட அனுமன் வானரர்களிடம் தன் பெருமையைக் கூற வெட்கப்பட்டுக் கொண்டு தான் இலங்கையில் ஆற்றிய வீரச் செயல்களைக் குறிப்பாலேயே உணரச் செய்தானாம். அனுமன் இலங்கையில் ஆற்றிய மறச் செயல்களைக் குறிப்பால் உணர்ந்துகொண்ட வானரர் கள் அனுமனை நோக்கிப் பின்வருமாறு கூறினாராம் : "நீ இலங்கையில் போர் புரிந்திருக்கிறாய் என்பதை, உன் புண்களே உரைக்கின்றன. நீ அரக்கர்களை வென்று விட்டாய் என்பதை, நீ உயிரோடு திரும்பி வந்துள்ளமையே உரைக்கிறது. நீ இலங்கையைக் கொளுத்தியிருக்கிறாய் என்பதை, அதோ தெரியும் பெரும் புகையே ஒதுகின்றது. அரக்கர்களும் வல்லவர்கள் என்பதை, நீ சீதையை மீட்டு