பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 1ji வைத்துக் கொண்டும் நெடுஞ்சாண் கிடையாய்க் கீழே விழுந்து தரையைத் தழுவிப் படுத்துக்கொண்டு வணங்கிய படியே சீதைய்ைப் போற்றிப் புகழ்ந்து வாழ்த்திக் கொண்டிருந்தான். அனுமனின் செயல்களைக் கண்ட இராமன், சீதை தென்திசையில் உள்ள இலங்கையில் இருக்கிறாள். அவளை அனுமன் கண்டுவந்திருக்கிறான்; பழிப்புக்கு இடமின்றி அவள் நல்ல கற்பு நெறியில் இருக்கிறாள் என்று குறிப்பால் அறிந்துகொண்டான். இச்செய்திகளைச் சொல்லின் செல்வ னாகிய அனுமன் ஒரு சொல்லும் சொல்லாமல் சொல்லித் தெரியவைத்து விட்டான். இராமனும் ஓரளவு ஆறுதல் பெற்றான். இந்த நிகழ்ச்சிகளைத் திருவடி தொழுத படலத் தில் உள்ள பின்வரும் பாடல்களால் அறியலாம்: 'எய்தினன் அனுமனும்; எய்தி ஏந்தல்தன் மொய்கழல் தொழுகிலன்; முளரி நீங்கிய தையலை நோக்கிய தலையன், கையினன், வையகம் தழிஇ நெடிதிறைஞ்சி, வாழ்த்தினான்’’. (அப்போது இராமன்) திண்திறல் அவன்செயல் தெரிய நோக்கினான் வண்டுறை ஒதியும் வலியள் மற்றிவன் கண்டதும் உண்டு; அவள் கற்பும் நன்றெனக் கொண்டனன் குறிப்பினால் உணரும் - கொள்கையான்'"ஆங்கவன் செய்கையே அளவை யாமென ஓங்கிய உணர்வினால் விளைந்தது உன்னினான்; iங்கின தோள் ; மலர்க் கண்கள் விம்மின; நீங்கியது அருந்துயர்; காதல் நீண்டதே’. என்பன பாடல்கள். அனுமன் சொல்லாமல் சொன்னதாகக் கற்பனை செய்துகாட்டிக் கவிச்சுவை ஊட்டிய கம்பனின் கலைத்திறனுக்குக் கைம்மாறு யாதோ?