பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. அருட்பா வாணர் அறிமுகம் : பெரும் புலவர் வேங்கடராசுலு ரெட்டியார் முதலியோரை ஆதரித்த பெரியார் ஒருவர் புதுச்சேரியில் வாழ்ந்தார். புதுவை நகருக்கு வடமேற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ள பாக்கம் உடையான் பட்டு என்னும் சிற்றுரரில் நடேசப் பிள்ளை என்பவரின் இரண்டாவது மகனாக இற்றைக்கு (1989) 83 ஆண்டுகட்கு முன் தோன்றிய இவரது திருப்பெயர் இராச மானிக்கம்’ என்பது. கல்வி : இவர் இளமையில் பிரெஞ்சும் ஆங்கிலமும் ஓரளவு பயின்றதுடன் தமிழ்க் கல்வியில் பெரும் புலமை பெற்றார். தக்க தமிழாசிரியர்களிடம் பயின்று பெற்ற தமிழ் அறிவை முதற் பொருளாகக் கொண்டு, தொடர்ந்து தாமே தமிழ் இலக்கிய - இலக்கண நூல்களைத் துருவித் துருவி ஆழ்ந்து கற்று அரும்பெரும் புலவரானார். இவர், தம் முதல் மகனுக்கு இளம் பூரணன் என்ற பெயர் சூட்டியிருப்பதைக் கொண்டே இவரது தமிழ்த் தொடர்பை அறியலாம். வாணிகம் : புதுவையில் வாணிகம் தொடங்கிய இவர், புதுவை நகருக்கே குடிவந்து விட்டார்; கடிகார வாணிகத்தை மேற்கொண்டார். கடை மிகவும் சிறியது. வாணிகமோ மிகவும் பெருகிற்று. பகலெல்லாம் வீட்டில் தமிழ் நூல்