பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் ክ1ጎ என்பது, பயின்றவர் தெரிவித்த செய்தி. தாம் ஆசிரியர் என்ற தருக்கு இன்றி, தம்மிடம் பயில்பவரைத் தமக்கு நிகராக மதித்த பெருமை இப்பெரியாருக்கு உண்டு என்பது இதனால் விளங்கும். நூலகம்: பெரியார் இராசமாணிக்கனார், தம் வீட்டில் முருக வேள் முத்தமிழாசரம்' என்னும் பெயரில் ஒரு சிறந்த நூலகம் வைத்திருந்தார். கிடைத்தற்கு அரிய, பெரிய நூல்கள் பல அந்நூலகத்தை அணி செய்தன. ஒவ்வொரு நூலுக்கும் அழகான மேலட்டை போடப்பட்டிருக்கும். இப்பெரியார் ஒவ்வொரு நூலையும் தம் கண்ணேபோல் . ஏன்-உயிரேபோல் காத்து வந்தார். படிப்பதற்கு இரவல் கேட்கும் அன்பர்கட்கு இல்லையென்னாது தம் கையா லேயே நூல்களை எடுத்தளிப்பார். மேலட்டையின்மேல், ‘ஒரு வாரத்தில் திருப்பிக் கொடுப்பது நன்று என எழுதப் பட்டிருக்கும். பலர்க்கும் உடனுக்குடன் கொடுத்து வாங்குவதற்காகப் போடப்பட்ட இந்த விதி' ஒர் ஒப்புக்கே யாகும். ஒரு வாரத்திற்கு மேல் வைத்திருப்பதற்கும் ஒப்புதல் உண்டு. என்னைப் போன்றோர் இந்நூலகத்தால் பெற்ற பயன் மிகுதி. சன்மார்க்க சங்கம்: இப்பெரியார் வடலூர் இராமலிங்க வள்ளலார்பால் பேரன்பு-பெருங்காதல் (பக்தி) கொண்டவர். ஒரு பெரிய வீட்டைவிலைக்கு வாங்கி, அதில் 'சமரச சுத்த சன்மார்க்க சங்கம்' என்னும் அமைப்பை நிறுவிப் பெரும்பணி புரிந்தார். இதற்காக மிக்க பொருளை வைப்பு நிதியாக வழங்கி யுள்ளார். வள்ளலாரின் திருஉருவப் படமும் அணையா விளக்கும் திருவருட்பா நூல் படிகள் பலவும் சங்கக் கட்டடத்தை அணி செய்து பொலிவு தந்து கொண்டிருக்