பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 மக்கள்குழு ஒப்பந்தம் கின்றன. நாடோறும் பூசனையும் உணவு படைத்து வழங்கலும் இன்றும் நடைபெற்று வருகின்றன. ஐயா அவர்கள் அதற்கு வேண்டிய ஏற்பாடு செய்துள்ளார்கள். தொடர்ந்த சிறப்பு விழாக்களும் சொற்ப்ொழிவுகளும் இன்றும் நடைபெற்றுக் கொண்டுள்ளன. நாட்ோறும் பல்வேறு தமிழ் நூல்கள் இலவசமாகக் கற்பிக்கப் பெறு கின்றன. சிறப்புப் பூசனை நாட்களில், ஏழைகட்குக் காலையில் கஞ்சியும் மதியத்தில் சிறப்பு உணவு விருந்தும் அளிக்கப் பெறுகின்றன. வள்ளல் குடும்பம்: சன்மார்க்க சங்கத்திற்கு இராசமாணிக்கனார் வைப்பு நிதி வழங்கியிருப்பதல்லாமல், அவர் தம் குடும்பத்தினரும் நெருங்கிய உறவினர்களுங் கூட தனித் தனியே பல்வேறு பெயர்களில் வைப்பு நிதி வழங்கியுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத் தக்கவர், இப்பெரியாரின் தமையனாராகிய நடேச குப்புசாமி பிள்ளை என்பவராவார். அவர் தம் பெயரால் வைப்பு நிதி வைத்துள்ளார். தம்பியைப் போலவே தமையனாரும் பெரிய வள்ளலாவார். அவர் அளித்துள்ள கொடைகள் பல. அதனால், அவருக்கு இச் சங்க விழா ஒன்றில் வள்ளல் என்ற சிறப்புப் பட்டம் வழங்கப் பெற்றது. சன்மார்க்க சங்க விழாக்களில், புலவர் கட்கு ஆடையும் பொருளும் பரிசாக வழ்ங்கப்படுவது உண்டு. தம்பி இராசமாணிக்கனார் இயற்கை எய்திய பின்னரும் தமையனாரால் இப்பரிசளிப்பு நடைபெறுவது உண்டு. அருட்பா வாணர்: அருட்பா வழங்கிய இராமலிங்க வள்ளலார்பால் இராசமாணிக்கனார் மிக்க ஈடுபாடு கொண்டிருந்ததாலும்,