பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 123 தனிப்பகுதியே அமைத்துள்ளார். அதனைச் சேர்ந்த பாக்களே இவைகள். இவற்றின் கருத்துகள் வருமாறு: எவரிடத்தும் எளிமையாய்ப் பழகுதல் பண்பாடு எனப்படும். எல்லாரிடத்திலும்-எல்லா உயிர்களிடத்தும் அன்புபூண்டு ஒழுகுதல் பண்பாடாகும். நல்ல குடும்பத்தில் நற் பண்புடைய பெற்றோர்க்குப் பிள்ளையாய்ப் பிறந்து, அந்தக் குடும்பத்தின் நல்ல மரபைப் பின்பற்றி ஒழுகுதல் ஒருவகைப் பண்பாடு. (இங்கே 'குடி' என்பது சாதியைக் குறிப்பதன்று.) உலகம் பார்ாட்டும் வகையில் நயமுடன் யாவர்க்கும் நன்மை புரிந்து பாரோர்க்குப் பயன்படுபவராக விளங்குதல் பண்பாடுடைமையாம். தமக்கு இன்னா செய்பவர்க்கும் இனியவை செய்தல் பண்பாடாம். தாம் பெற்ற பெரிய செல்வத்தைப் பிறர்க்குப் பயன்படுத்துதல் பெரிய பண்பாடு. - மரபு நிலையும் சூழ்நிலையும் : மேலுள்ள கருத்துகள் பண்பாட்டிற்கு வள்ளுவர் தந்துள்ள விளக்கமாகும். 'ஒருவனது பண்பாட்டைத் தீர்மானிப்பவை அவனுடைய மரபுநிலை (Heredity) சூழ்நிலை (Environment) என்னும் இரண்டாகும் என்பது ஒருசார் உளவியல் கருத்து. ஆம்! நல்ல மரபில் (குடும்பத்தில்) பிறந் ததால் பெற்றுள்ள நற்பண்பை அவனது தீய சூழ்நிலை கெடுத்து விடலாம். தீய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த தால் ஊறிப்போன தீக் குணத்தை நல்ல சூழ்நிலையில் மாற்று முடியூாழலும் போகலாம். எனவே, நற்பண்பு வளர, மரபு நிலுையும் நல்லதாயிருக்க வேண்டும். - சூழ்நிலையும் நன்றாயிருக்க வேண்டும். எனவேதான் நல்ல மரபுநில்ை வேண்டும் என்னும் கருத்தை "ஆன்ற குடிப்பிறத்தல்” என்னும் குறட் பகுதியாலும் நல்ல சூழ்நிலை வேண்டும் என்னும் கருத்தை மற்ற குறள்களாலும் வள்ளுவர் வலியுறுத்திப் போந்தார்.