பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 மக்கள்குழு ஒப்பந்தம் மேற்காட்டப்பட்டுள்ள குறள்கள், பொதுவாகப் பண் பாட்டை விளக்கும் இலக்கணமாகத் திகழ்வதுடன், சிறப்பாகப் பழந்தமிழர் பண்பாட்டை விளக்கும் இலக்கிய மாகவும் விளங்குகின்றன. பண்புடைமை பற்றி வள்ளுவர் பொது மறையாம் தம் நூலில் ஒருபகுதியே அமைத்துள்ளார் எனின், பழந்தமிழர் பண்பாட்டின் சிறப்பை என்னென்று வியந்து பாராட்டுவது! நீண்ட நெடுங்காலமாகவே பண் பட்டு வந்த ஒர் இனத்தில் (ஒரு சமுதாயத்தில்) பிறந்து வளர்ந்து வாழ்ந்த ஒருவராலேயே இவ்வளவு அரிய பெரிய பண்பாட்டு விளக்கம் அளிக்க முடியும் அல்லவா? பண்பாட்டை வலியுறுத்தும் பண்பாள ராகிய திருவள்ளுவர், தமது குறளில் கூறியுள்ள 'ஆன்ற குடிப் பிறத்தல்” என்னும் இலக்கணத்திற்குத் தக, உலகக் குடிமக்களுள் உயர்ந்த தமிழ்க் குடியில் பிறந்ததினாலேயே, உலகம் முழுவதும் ஏற்றுப் போற்றும் ஒப்பற்ற திருக்குறளை இயற்ற முடிந்தது. தமிழ்ப் பண்பாட்டின் தொன்மை : தமிழ்க் குடியின் பழைமைக்கும் அதன் உயரிய பண்பாட்டிற்கும் இன்னும் ஒரு சான்று காண்போமா? திருக்குறள் - பொருட்பால் - குடிமை என்னும் பகுதியில் உளள, வழங்குவ துள் வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பின் தலைப்பிரிதல் இன்று என்னும் குறட்பாவும், இதற்குப் பரிமேலழகர் எழுதி யுள்ள, 'தொன்றுதொட்டு வருகின்ற குடியின்கட் பிறந்தார் தாங்கொடுக்கும் பொருள் பண்டையிற் சுருங்கியவிடத்தும் தம்பண்புடைமையின் நீங்கார்; தொன்றுதொட்டு வருதல் சேர, சோழ, பாண்டியர் என்றாற்போலப் படைப்புக் காலந்தொடங்கி மேம்