பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் i25 பட்டு வருதல். அவர்க்கு நல்குரவாவது வழங்குவது உள் வீழ்வது ஆகலின் அதனையே கூறினார் ' என்னும் உரைப் பகுதியும் ஈண்டு ஆழ்ந்து எண்ணத்தக்கன. 'சேர, சோழ, பாண்டியரால் ஆளப்பட்ட தமிழ்க்குடி, படைப்புக் காலந் தொட்டு மேம்பட்டு வந்த பழம்பெருங்குடி. அது. வறுமை வந்த காலத்தும் பிறர்க்கு வழங்குவதை நிறுத்தாத பண்பாடு உள்ள குடி என்பது, பரிமேலழகரது கூற்றால் தெளிவுறும். பழந்தமிழர் பண்பாட்டிற்கு இன்னும் சான்று வேண்டுமா? இதோ? ஆற்றுப்படைப் பண்பாடு : கலைஞன் ஒருவன் வள்ளல் ஒருவரிடம் சென்று உத்வி பெற்று வருகிறான். வரும் வழியில் தன்னைப் போன்ற கலைஞன் வேறொருவனைக் காண்கின்றான். அப்புதியோ னிடம், தான் பெற்று வந்த உதவியைக் குறிப்பிட்டு, இன்ன வழியாக, இன்னாரிடம் சென்றால் இன்ன உதவியைப் பெற்று வரலாம் என்று அறிமுகம் செய்து அவனை வழிப் படுத்தி - வழிசுட்டி அனுப்பி வைக்கின்றான். இந்த உயரிய பண்பாட்டிற்குத் தமிழ் நூல்களில் "ஆற்றுப்படை” என்னும் அழகிய பெயர் வழங்கப்பட்டுள்ளது. ஆறு என்றால் வழி; ஆற்றுப் படுத்துதல் என்றால் வழிப்படுத்திவழிகூட்டி அனுப்பி வைத்தல் என்பது பொருள். இது பழந்தமிழர் பண்பாடு. பழந்தமிழ்ச் சங்க இலக்கியங்களுள் தொகைப் பெயரால் குறிக்கப்படும் பத்து நூல்கள் உள்ளன. இந்தப் பத்து நூல்களுள் பாதி நூல்கள் - அஃதாவது ஐந்து நூல்கள் ஆற்றுப்படை நூல்களாக இருப்பதைக் காணலாம். ஆற்றுப் படைக்காகத் தமிழில் முழு முழு நூல்கள் பல தோன்றினமையைக் கொண்டு பழந்தமிழர் பண்பாட்டின் உயர் எல்லையை உணரலாம். இலக்கியம்