பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 மக்கள்குழு ஒப்பந்தம் எனப்படுவது தான் தோன்றிய இடத்தில் - தான் தோன்றிய காலத்தில் வாழ்ந்த மக்களின் மனப்பண்பை எடுத்துக்காட்டும் ஒருவகைக் கண்ணாடியாகும். இதற்குச் சான்று ஆற்றுப்படை நுால்கள். தமிழில் சிறுசிறு தனிப் பாடல்களும் உண்டு. தம்மினும் மேலாக அல்ல - தமக்கு நிகராகவும் பிறர் வந்து விடக்கூடாது என்று எண்ணும் மக்கள் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் இருக்கும்போது,- தாம் பெற்ற நன்மையைப் பிறர் அறியக் கூடாது, பிறர் பெறக் கூடாது என்று மறைக்கும் மாக்கள் பலர் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் இருக்கும்போது,- தாம் தீமையுற்று விட்டால் அந்தத் தீமையைப் பிறரும் பெற வேண்டும், பெறச் செய்ய வேண்டும் எனச் சூழ்ந்து அதற்கென முயலும் கீழ் மக்கள் மிகப்பலர் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் இருக்கும் போது,- இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே “ஆற்றுப் படை’ செய்யும் அரிய பண்பாடு தமிழ் மக்களிடையே இருந்ததென்றால், அதனை எந்தச் சொற்களால் பாராட்டுவது ? ஆற்றுப்படையின் பழைமை : ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய இந்த ஆற்றுப்படை நூல்கள் ஒருபுறம் இருக்க,- மூவாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய தாகக் கருதப்படும் தொல்காப்பியத்திற்குள்ளும் புகுந்து தொல்காப்பியத்திலும் இருப்பது இதோ தெரிகிறது:

  • கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறிஇச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும் '