பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 129 பட்டு வந்தால்தான், பழந்தமிழர் பண்பாடு நிலைத்த, நீடித்த பெருமைக்கு உரியதாகப் போற்றப்பெறும். ஆனால் அது, தமிழரிடத்தில்-தமிழகத்தில் குறையாது வளர்ந்தே வந்து கொண்டிருக்கிறது என்பதற்கு அண்மைக்காலத்தில் வாழ்ந்த வடலுார் இராமலிங்க வள்ளலாரின் அருட்பா ஒன்றே போதிய சான்று பகரும். இதோ அந்தப் பாடல்: வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன்! பசியினால் இளைத்தே வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்! நீடிய பிணியால் வருந்துகின் றோ ரென் னேருறக் கண்டுளந் துடித்தேன்! ஈடில்மா னிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்! இந்தப் பாட்டு, வடலூர் வள்ளலின் உள்ளத்தை உள்ள வாறு அறிவிக்கும் எக்சு-ரே கருவியன்றோ? பசியாலும், பிணியாலும் உள்ளத்துயராலும் வருந்தும் மக்களுக்காக வள்ளலார் வருந்தியிருப்பதுங்கூட, ஒரு பெரிய செயலன்று! வாடிய பயிரைக்கண்டபோதெல்லாங் கூட, அவர் வாடியது தான் ஈண்டு உணரத் தக்கது. வழி வழிப் பண்பாடு அன்று, துவண்ட முல்லைக்கொடிக்குத் தேர் ஈந்தான் தமிழ்ப் பாரி! குளிரில் நடுங்கிய மயிலுக்குப் போர்வை போர்த்தினான் தமிழ்ப் பேகன்! இன்று, வாடிய பயிரைக் கண்டு வாடி வதங்கினார் வடலூரார். அங்ங்ணம் աուգա வடலூர் வள்ளலாரின் பண்பு தமிழ்ப் பண்பாடு, - தமிழர் பண்பாடு, - பழந்தமிழர் மரபு வழிவந்த பண்பாடு. இந்தப் பண்பாட்டிற்கு முடிவேயில்லை. இது தொடர்கதையாய் நீண்டு வளர்ந்து கொண்டே செல்லும். வாழ்க பழந்தமிழர் பண்பாடு!...