பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 131 வழங்கப்படுகிறது. வேமன்ன பத்தியம் எனக்கு 1942ஆம் ஆண்டிலேயே அறிமுகம் ஆயிற்று. எனக்கு நினைவிருக்கும் அளவில் ஒரு பாடலை இங்கே தருகிறேன். இப்போது நூல் கையில் இல்லையாதலின் தவறிருப்பின் பொறுத்தருள வேண்டும். இதோ ஒரு பாடல் தமிழ் வடிவத்தில் வருமாறு: ' உப்புலேனி கூர ஊனம் புருச்சலகு பப்புலேனி கூடு பலமு லேது அப்புலேனி வாடு அதிக சம்பன்ன்டு விஸ்வதாயி ராமா வினர வேமா" என்பது ஒரு பாடல். உப்பில்லாத காய்கறி (பதார்த்தம்) பயனற்றது என்பது முதலடியின் பொருள். பருப்பு இல்லாத உணவு வலிமை தராது என்பது இரண்டாம் அடியின் பொருள். மூன்றாம் அடியின் பொருளாவது: கடன் இல்லாத மனிதன் பெரிய பணக்காரனாக மதிக்கப் பெறு வான் என்பதாகும். இறுதி நான்காம் அடியில், அபிராமா என்று ஆசிரியர் பெயரும் வேமா' என்று வேமன்னரின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளன. கடன் இல்லாத மனிதன் பெரிய பணக்காரன் என்பது பொருள் பொதிந்த அடியாகும். மற்றும், வேமன்னர், உணவில் பருப்பு வேண்டும் என்பதோடு விட்டாரா என்ன! நெய்யும் வேண்டும் என்கிறர். - " நெய்யிலேனி கூடு நிய்யான கனுவதி பிரியமுலேனி கூடு பிண்டபு கூடயா' என்பது ஒரு பாடல் பகுதி. இதன் கருத்து நெய் இல்லாத உணவு ஒழுங்கற்றது; அன்பு இன்றி இடும் உணவு பிண்டச் சோற்றுக்கு இணையாகும் என்பதாம். இதே கருத்தை ஒளவைப் பிராட்டியும் நெய்யில்லா உண்டி பாழ்' என்று நல்வழி என்னும் தமது நூலில் கூறியிருக்கிறாரே!