பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 மக்கள்குழு ஒப்பந்தம் மற்றும், பிறர்க்கு உணவிடின் உண்மையான அன்போடு இடவேண்டும் என்பது வேமன்னரின் அறிவுரையாகும். உமாதேவியார் ஞானசம்பந்தர்க்குப் பாலில் ஞானத்தைக் குழைத்துக் கொடுத்தது போல, நெய்யில் அன்பைக் குழைத்துக் கொடுக்க வேண்டும் போலும்! மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை உடைய வர்களை வேமன்னர் மிகவும் கண்டிக்கின்றார்; வீரர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்களும். வீரத்தை இழந்து இந்த ஆசைக் கடலுக்குள் வீழ்ந்து முழுகி விடுவதை எண்ணி வருந்துகிறார் வேமன்னர். கோயிலுக்குச் சென்று தெய்வத்தை வழிபடாமல் வேறு பொருள்களில் எண்ணத் தைச் சிதறச் செய்பவரை, பிறர் வீடுகளில் புகுந்து உணவுப் பண்டங்களை உருட்டும் நாய்கட்கு ஒப்பிடுகிறார் வேமன்னர். பலர் பிறர்க்கு உதவாமல் இறந்து போவதற்கு, புற்றில் கரையான்கள் பல தோன்றி மறைவதை ஒப்பிடுகிறார். கொல்லுதற்கு உரியவனாயினும், அவனுக்குத் தீங்கு செய்யாமல். அவனிடம் அன்புகாட்டி அறவுரை பகரின் அவன்திருந்துவான் என்று கனவு காண்கிறார் வேமன்னர். அற்பர்கள் என்றும் ஆரவாரித்துப் பேசுவார்கள்; உயர்ந்தவர் எப்போதும் அடக்கமாயிருப்பர் ; வெண்கலப் பாண்டங்களின் கல கலக்கும் ஓசை பொன்பாண்டங்கட்கு இல்லையன்றோ? இது வேமன்னர் கூற்று. உள்ளத்தில் தூய்மையின்றி, சடைமுடியும் தண்டமும் கமண்டலமும் புலித்தோலும் சுமப்பதால் ஒரு பெருமையும் இல்லை-என்று கரவு உள்ளம் உடையவர்களைக் கண்டிக் கிறார் வேமன்னர்.