பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. குரு நானக்கின் படிப்பினைகள் அருளாளர் குரு நானக் சீக்கிய மதத்தின் நிறுவன ராவார்; மக்கட்கு இறைநெறி கற்பித்த ஆசானும் ஆவார். இப்பெரியார் கி.பி. 1469 ஆம் ஆண்டு, இப்போது பாகிஸ் தானிலிருக்கும் லாகூருக்கு அருகே உள்ள தன்வந்தி என் னும் இடத்தில் கத்திரி என்னும் வகுப்பில் பிறந்தார். இவர் பிறந்த ஊர்'டல்வாண்டீ என்றும் சொல்லப்படு கிறது. . சீக்கிய மதத்தில் இவரைத் தொடர்ந்து இவர் உட்பட ஒன்பது குருமார்கள் இருந்து மதத்தை வளர்த்தனர். ஒன்பதின்மருள் முதல்வராகிய நானக் இளமையிலேயே கடவுள் பற்று மிக்கவராய், ஆழ்ந்த எண்ணத்தில்-தியானத் தில் இருந்தாராம். அருளாளர்களுடன் நட்பு கொண்டு பழகி வந்த நானக் திருமணமும் செய்துகொண்டார். இவர் கடவுட் பாடல்கள் பல இயற்றினார். இவருடைய முஸ்லீம் .நண்பராகிய மாதானா என்னும் இசைவாணர் தம் இசைக் கருவியை மீட்டி வாசிக்க, நானக் பாடல்களைப் பாடுவா ராம். நானக் பாடிய ஜப்ஜி என்னும் ஜெபப் பாடல் களைச் சீக்கியர்கள் நாள்தோறும்.இறைவேட்டலாக - பிரார்த்தனையாகப் பாடுவர். குருமார்கள் ஒன்பதின்மருள். நாலாமவராகிய இராம தாஸ் என்பவர், அமிர்தசரஸ் என்னும் நகரத்தை அமைத்து, அதில் புகழ் மிக்க பொற்கோயிலை எழுப்பி -னார். அவரை அடுத்த ஐந்தாவது குருவாகிய அர்ஜுன் என்பவர், குரு நானக்கின் பாடல்களையும், ஏனைய குரு மார்களின் அறவுரைகளையும், கபீர்-நாமதேவ் முதலிய