பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முக்கள்குழு,ஒப்பந்தம் 135 அருளாளர்களின் பாடல்களையும் தொகுத்து.ஒரு படைப்பு போல் உருவாக்கினார். இதற்கு ஆதி கிரந்தம்’ என்னும் பெயர் வழங்கப்படுகிறது. சீக்கியர்கள் பொற்கோயிலில் இந்த ஆதிகிரந்தத்தைத்தான் கடவுளாக வைத்து வணங்கி வருகின்றனர். அவர்கட்கு உருவ வழிபாடு கிடையாது. இதிலிருந்து தெரிவது: நானக்கின் பாடல்கள் கடவுள் அளவுக்கு உயர்ந்துவிட்டன-என்பதாகும். குரு நானக்கின் காலத்தில் எல்லா இடங்களிலும் மதப்போர் மிக்கிருந்தது. உண்மை நெறி உணராமல், அற்பத்தனமாகக் கலகங்கள் செய்து கொண்டிருந்தனர். அப்போது குரு நானக், மதங் களின் பெயர்கள் வேறு வேறாய் இருக்கலாம்; ஆனால் எல்லா மதங்கட்கும் கடவுள் ஒருவரே; இராமனும் இரகீமும் ஒருவரே; எனவே, மக்கள் மதக் கலவரத்தை மறந்துவிட வேண்டும் என மக்கட்கு அறிவுரை வழங்கினார். "ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்னும் திருமூலரின் திருமந்திர மொழி ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. - குரு நானக் கிழக்கே காசியிலிருந்து மேற்கே மெக்கா வரைக்கும், வடக்கே காசுமீரத்திலிருந்து தெற்கே இலங்கை வரைக்கும் திருப்பயணம் செய்தார். சென்ற இடமெல்லாம் சாதி சமயச் சழக்குகளை நீக்க வேண்டும் எனவும் ஒன்றே தெய்வம் எனவும் அறிவுறுத்தினார். இவர் தம் வாழ்நாளின் இறுதி இருபதாண்டு காலத் தில், இரவி ஆற்றங் கரையிலுள்ள கர்த்தார்பூர் என்னும் ஊரில் தம் குடும்பத்தாருடன் வாழ்ந்துவந்தார். அங்கே நாள்தோறும் மக்கள் குழுமினர் இறை வணக்கப் பாடல் கள் மிகவும் இசைக்கப் பெற்றன. இலவச உணவுக்கும் ஏற்பாடு செய்யப் பெற்றதாம். பணிகள் பல புரிந்த நானக், இவ்விடத்தில் கி.பி. 1539-ஆம் ஆண்டு தம் ஊன் உடல் துறந்தார்.