பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 மக்கள்குழு ஒப்பந்தம் குருநானக் தம் வாழ்நாளை ஊழலை ஒழித்து உண்மை நெறியைப் பரப்புவதில் செலவிட்டார்; எல்லா மதங் களிலும் உள்ள நல்லனவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்; இந்து - முசுலீம் வேற்றுமையின்றிச் செயல் பட்டார்; தீண்டாமையை ஒழிக்கப் போராடினார்; ஏழை களிடத்தில் இரக்கம் காட்டிப் பிறரையும் பின் பற்றச் செய்தார்; பிறப்பால் வேறுபாடு இல்லை என்பதைக் கற் பித்தார். ஈண்டு, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்னும் திருக்குறட்பா ஒப்புநோக்கற்பாலது. . மத சகிப்புத் தன்மையை வற்புறுத்திய நானக், மக் களின் அறியாமையையும் மூடப் பழக்க வழக்கங்களையும் ஒழிக்கப் பாடுபட்டார். புத்துலகச் செய்திகளில் கருத்து செலுத்தினார். சமூக நீதிக்கும் பெண்ணுரிமைக்கும் போராடினார். பெண்கள் அரசர்கள் சிலரால் துன்புறுத்தப் படுவதற்கு வருந்தினார். தொண்டு உள்ளமும் விட்டுக் கொடுக்கும் பரந்த மனப்பான்மையும் வேண்டும் என மன்றாடினார். தத்தம் சமயங்களைப்பற்றி உயர்வாகப் பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை; எல்லாரையும் சமமாக மதிப்பதே உண்மைச் சமயமாகும் என உணர்த்தினார். தியானம் செய்வதும் தெய்வக்கோயில் வழிபாடும் தெய்வ நீராடலும் உண்மைச் சமய ஒழுக்கமாக முடியாது; உண்மையான அன்பும் தூய்மையான வாழ்க்கையுமே உண்மைச் சமய நெறியாகும் - உண்மை வழிபாடும் ஆகும் என்று அறிவுறுத்தினார். ஈண்டு, 'காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தை சுற்றி, ஒடே எடுத்தென்ன உள்ளன் பிலாதவர் ஒங்கு விண் ணோர், நாடேய் இடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர் பால், வீடேயிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவு வரே'-என்னும் பட்டினத்தார் பாடல் ஒப்பு நோக்குதற் குரியது.